இந்தியாவில் மலிவான கார் கடன் வட்டி விகிதம்: நாடு முழுவதும் பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளது. நீங்களும் இந்த சீசனில் புதிய கார் வாங்க விரும்பினால், அதற்கு கடன் தேவை என்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தச் செய்தியில் சில வங்கிகளின் கார் கடன்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இவற்றின் அடிப்படையிலும், உங்கள் சொந்த வசதிக்கு ஏற்பவும் நீங்கள் கார் வாங்குவது குறித்து நேர்த்தியான முடிவை எடுக்க முடியும்.
குறைவான இஎம்ஐ செலுத்துவதற்கான வழி
பெரும்பாலான கார் கடன்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு கிடைக்கும். சில வங்கிகள் 7 ஆண்டுகளுக்கு கடன் தருகின்றன. அத்தகைய கடனின் காலம் நீண்டதாக இருப்பதால், அதன் தவணை (EMI) குறைக்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு கடன் வாங்கினால், அதிக வட்டி செலுத்த வேண்டும். கார் எவ்வளவு பழையதாக இருக்கிறதோ, அதன் விலையும் அத்தனை குறைவாக இருக்கும். ஆகையால், நீண்ட காலத்திற்கு கடன் வாங்குவது புத்திசாலித்தனம் அல்ல.
80 சதவீதம் வரை கடன் பெறலாம்
நீங்கள் குறுகிய காலத்திற்கு கடன் வாங்கினால், அதிக இஎம்ஐ செலுத்த வேண்டியிருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கார் கடனில் பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. சில வங்கிகள் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைக்கு இணையான கடன்களை வழங்குகின்றன, சில வங்கிகள் 80 சதவீதம் வரை கடன் வழங்குகின்றன. கார் கடனைப் பெறும்போது, வட்டி விகிதம் மற்றும் செயலாக்கக் கட்டணத்துடன் மற்ற கட்டணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | இந்தியாவின் அதிவேக ரயிலைப் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்
ஒரு லட்சத்தில் தவணை எவ்வளவு இருக்கும்
எஸ்பிஐ, பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் கார் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றன. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கனரா வங்கி இந்த தள்ளுபடியை டிசம்பர் 31ம் தேதி வரை வழங்குகிறது.
பல வங்கிகள் கடன் தொகையில் அரை சதவீதம் முதல் 1 சதவீதம் வரை செயலாக்கக் கட்டணமாக வசூலிக்கின்றன. தற்போது, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் குறைந்த விலையில் கார் கடன் வழங்கப்படுகிறது. இதில், சில வங்கிகளின் ரூ.1 லட்சம் மற்றும் 5 ஆண்டு காலத்திற்கான வட்டி விகிதம், இஎம்ஐ மற்றும் வட்டி விகிதம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
- சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா: வட்டி விகிதம் (%): 7.40-8.55, வட்டி (ரூ.): 1999-2054, செயலாக்கக் கட்டணம்: ஒன்றுமில்லை.
- ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா: வட்டி விகிதம் (%): 7.85-8.65, வட்டி (ரூ.): 2020-2059, செயலாக்கக் கட்டணம்: ஒன்றுமில்லை.
- பேங்க் ஆஃப் பரோடா: வட்டி விகிதம் (%): 7.95-11.20, வட்டி (ரூ.): 2025-2184, செயலாக்கக் கட்டணம்: ரூ. 1500 + ஜிஎஸ்டி.
- எச்டிஎஃப்சி பேங்க்: வட்டி விகிதம் (%): 8.35, வட்டி (ரூ.): 2044, செயலாக்கக் கட்டணம்: கடன் தொகையில் 0.5%.
- ஐசிஐசிஐ பேங்க்: வட்டி விகிதம் (%): 8.1-8.8, வட்டி (ரூ.): 2032-2066, செயலாக்கக் கட்டணம்: ரூ.5500-8500.
- பஞ்சாப் நேஷனல் பேங்க்: வட்டி விகிதம் (%): 8.15-9.15, வட்டி (ரூ.): 2035-2083, செயலாக்கக் கட்டணம்: ஒன்றுமில்லை.
- பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா: வட்டி விகிதம் (%): 8.2-11.70, வட்டி (ரூ.): 2037-2209, செயலாக்கக் கட்டணம்: ஒன்றுமில்லை.
- ஆக்சிஸ் பேங்க்: வட்டி விகிதம் (%): 8.20-11.40, வட்டி (ரூ.): 2037-2194, செயலாக்கக் கட்டணம்: ரூ. 3500-5500.
- இண்டியன் பேங்க்: வட்டி விகிதம் (%): 8.25-11.40, வட்டி (ரூ.): 2040-2122, செயலாக்கக் கட்டணம்: கடன் தொகையில் 0.5%.
- கேனரா பேங்க்: வட்டி விகிதம் (%): 8.30-11, வட்டி (ரூ.): 2042-2174, செயலாக்கக் கட்டணம்: ஒன்றுமில்லை.
- பேங்க் ஆப் இந்தியா: வட்டி விகிதம் (%): 8.25-9.95, வட்டி (ரூ.): 2040-2122, செயலாக்கக் கட்டணம்: ஒன்றுமில்லை.
மேலும் படிக்க | அதிர்ச்சி கொடுத்த RBI; மீண்டும் உயரும் ரெப்போ விகிதத்தால் EMI அதிகரிக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ