மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயருமா...? வந்தது பெரிய அப்டேட்
Retirement Age: மத்திய அரசின் ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
Central Government Employees Retirement Age: குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று நடந்த கேள்வி - பதில் நேரத்தில், மத்திய அமைச்சர் அளித்த பதில் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் கவனத்தை கவர்ந்துள்ளது. மத்திய அரசு அதன் ஊழியர்களின் ஓய்வூதிய வயதை உயர்த்தும் திட்டத்தை கையில் வைத்திருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்தார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில்,"அப்படி எந்தவொரு திட்டமும் மத்திய அரசின் யோசனையில் இல்லை" என தெரிவித்துள்ளார். இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60 ஆக நீடிக்கும் என கூறப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வந்த 5ஆவது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி 58 ஆக இருந்த ஓய்வு பெறும் வயது 60 ஆக மாறியது.
கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு ஓய்வு பெறும் வயதை வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 62 ஆக உயர்த்த உள்ளதாக தகவல்கள் பரவியது. இருப்பினும் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளிவராமல் இருந்த நிலையில், மத்திய அரசின் தரப்பில் இன்று பதில் வந்துள்ளது.
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
மேலும், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்தப்பூர்வ பதிலில் கூறியதாவது,"தேவையின் அடிப்படையில், அரசு சேவைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான கொள்கைகள், திட்டங்கள், இன்ன பிற நடவடிக்கைகளை வகுப்பதில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் அவ்வப்போது காலியாக உள்ள பணியிடங்களை காலக்கெடுவுக்குள் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ரோஸ்கர் மேளாக்கள் (Rozgar Melas) என்ற நிகழ்வு, அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் உள்ள நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பவும், இளைஞர்களுக்கு சிவில் சர்வீஸ் வேலைவாய்ப்பை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.
மூத்த குடிமக்களுக்கு ரயிலில் மானியம் குறித்தும்...
இதேபோல், ரயிலில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மீண்டும் அமலுக்கு வருமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்திருந்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,"ரயிலில் பயணிகளும் அனைவருக்குமே மானியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசு பயணிகளுக்கு வழங்கும் மொத்த மானியத்தின் தொகை ரூ.56,993 கோடியாகும். அதாவது உதாரணத்திற்கு, 100 ரூபாய் மதிப்பிலான பயண சேவைக்கு பயணிகளிடம் 54 ரூபாய்தான் வசூலிக்கப்படுகிறது. மீதம் உள்ள 46 ரூபாயும் அனைத்து வகுப்பினருக்கும் மானியமாகவே வழங்கப்படுகிறது" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ