8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மக்களவையில் நிதி அமைசகம் கொடுத்த ஷாக்

8th Pay Commission:  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் இப்போது இல்லை என மத்திய நிதி அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 4, 2024, 02:44 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி.
  • மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி.
  • ஷாக் கொடுத்த நிதி அமைச்சகம்.
8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மக்களவையில் நிதி அமைசகம் கொடுத்த ஷாக் title=

8th Pay Commission: 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி வந்துள்ளது. அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் இப்போது இல்லை என மத்திய நிதி அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த செய்தி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Rajya Sabha: மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி

மாநிலங்களவையில் 8வது ஊதியக்குழு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார். 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பது தற்போது பரிசீலனையில் இல்லை என்று அவர் தன் பதில் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இது ஊழியர்களுக்கு பேரிடியாக வந்துள்ளது.

Budget 2025

மாநிலங்களவை எம்.பி.க்கள் ஜாவேத் அலி கான் மற்றும் ராம்ஜி லால் சுமன் ஆகியோர், வரும் பட்ஜெட்டில், 8வது ஊதியக்குழு அமைப்பது குறித்து, அரசு அறிவிக்க உள்ளதா என, கேள்வி எழுப்பினர். ஊதிய விகிதங்களை திருத்தியமைக்க அரசாங்கத்தின் நிதி நிலைமை ஒரு காரணியா என்றும் அவர்கள் விசாரித்தனர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், தற்போது அது குறித்த எந்தப் பிரேரணையும் பரிசீலனையில் இல்லை என்றும் இதன் காரணமாக இந்த விவகாரம் எழவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜாவேத் அலி கான் மற்றும் ராம்ஜி லால் சுமன் ஆகியோர் பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள 2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் புதிய ஊதியக் குழுவைப் பற்றி ஏதாவது அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் கேட்டனர்.

மேலும் படிக்க | EPFO Rule Change: விதிகளில் மாற்றம், இந்த பிஎஃப் உறுப்பினர்களுக்கு க்ளெய்ம் செயல்முறை மாறியது

ஊதிய விகிதங்களைத் திருத்துவதற்கு மத்திய அரசின் நிதி நிலைமை தடையாக இருக்குமா என்ற கவலையும் இந்த கேள்வி மூலம் எழுப்பப்பட்டது. எனினும், தற்போதைக்கு புதிய சம்பள கமிஷனுக்கான திட்டம் எதுவும் இல்லை என்பதால், இந்த பிரச்சினை பொருத்தமானது அல்ல என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

புதிய ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை: நிதி அமைச்சகம்

புதிய ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று நிதி அமைச்சகம் (Finance Ministry) உறுதி செய்துள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்கள் (Pensioners) இன்னும் நம்பிக்கையுடன் இருக்கவும் சில காரணங்கள் உள்ளன. 7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பதவிக்காலம் 2025 டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எந்த முன்னேற்றங்களுக்கும் இன்னும் நேரம் உள்ளது. ஆகையால் அடுத்த ஊதியக்குழு குறித்து முடிவெடுக்க அரசுக்கு இன்னும் நேரம் உள்ளது.

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்பட்டன. இதில் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அரசாங்கம் 8வது ஊதியக் குழுவை அறிவித்து, அது அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சுமார் 186 சதவீதம் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்ளுக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.

மேலும் படிக்க | EPFO RULE: ஓய்வூதிய பலன் பாதிக்காமல்... PF கணக்கில் இருந்து பணம் எடுப்பது எப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News