ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அதிகரிக்கும் பயனாளிகளின் எண்ணிக்கை: எந்த மாநிலம் முதலிடம்?
Ayushman Bharat: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் பலன்கள் வழங்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றத்திற்கு பிறகு, ஒரே வாரத்தில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர், இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
Ayushman Bharat: மக்களின் நலனிற்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகிறது. அவற்றில் குறிப்பாக, பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கபப்டுகின்றது. அப்படி, சுகாதார திட்டமாக தொடங்கப்பட்ட மிக முக்கிய்மான ஒரு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டம். மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தற்போது விரிவுபடுத்தியுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் பலன்கள் வழங்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றத்திற்கு பிறகு, ஒரே வாரத்தில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர், இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
Senior Citizens: முதியோர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது
சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை விரிவுபடுத்தினார். இதில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் சேர்க்கப்பட்டனர். இது மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட 2.16 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் இதில் இணைந்துள்ளனர்.
இந்த மாநிலம் எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளது
தேசிய சுகாதார ஆணையம் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள நபர்களின் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இதில், இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட ஒரே வாரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர்கள் இதில் இணைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலான முதியவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலத்தில் மட்டும் சுமார் 89,800 முதியவர்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மாநிலம் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது
கேரளாவுக்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். மத்திய பிரதேசத்தில் பிரதமர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 53,000 மூத்த குடிமக்கள் புதிதாக பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்குப் பிறகு, உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு 47 ஆயிரம் மூத்த குடிமக்கள் புதிதாக திட்டத்தில் இணைந்துள்ளனர்.
ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இன்னும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஆந்திராவில் இருந்து 3488 முதியோர்களும், தெலுங்கானாவில் இருந்து 3056 பேரும், தமிழகத்தில் இருந்து 3156 பேரும் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். மேற்கு வங்கம் மற்றும் டெல்லியைச் சேர்ந்த முதியவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது, ஏனெனில் அங்குள்ள அரசாங்கங்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டன.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்றால் என்ன?
இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பயனாளிகள் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சைக்கான பலன் பெறுகின்றனர். திட்டத்தின் பலன்களைப் பெற, PMJAY இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ