8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் 2 நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. இதனால் அவர்களது நிதி நிலை மேன்மையடையும்.
8th Pay Commission: 8வது உதியக் குழுவிற்கான அறிவிப்பு ஜாக்பாட் ஊதிய உயர்வை உறுதி செய்யும். 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் (Minimum Basic Salary) ரூ.18,000 லிருந்து 51,480 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகப்பெரிய ஊதிய உயர்வாக இருக்கும்.இதனுடன் மத்திய அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுபிஎஸ்-ன் கீழ், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பணியாளரின் சம்பளத்தைப் பொறுத்து ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
8வது ஊதியக் குழு பற்றிய மத்திய அரசின் அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஊதியக்குழு உருவாக்கப்பட்டவுடன், நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் பணவீக்கத்துக்கு ஏற்றவாறு சம்பளம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களுக்கான பரிந்துரைகள் வழங்கப்படும்.
8வது உதியக்குழு குறித்து அரசாங்கத்தின் தரப்பில் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டின் போது இதற்கான அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அரசு ஒப்புதல் அளித்தால், அடுத்த ஆண்டு ஜனவரியில் 8வது ஊதியக் குழுவின் கீழ் மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
கூட்டு ஆலோசனை அமைப்புகளின் தேசிய கவுன்சில் (NC-JCM) ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும் என முன்மொழிந்துள்ளது. இது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சம்பளம் 2.86 மடங்கு உயரும் என சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை கணக்கிடுவதற்கு ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ தீர்மானிக்கும் அளவுகோலாகப் பயன்படுத்தப்படுகிறது. 7வது ஊதியக் குழுவின் நிபந்தனைகளின்படி, அப்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன் விளைவாக, அடிப்படை சம்பளம் ரூ.7,000 -இல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது.
ஊதிய உயர்வு: 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் (Minimum Basic Salary) ரூ.18,000 லிருந்து 51,480 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகப்பெரிய ஊதிய உயர்வாக இருக்கும்.
8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாற்றப்பட்டால், அது ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போதைய நிலவரப்படி, 7வது ஊதியக் குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரான 2.57ஐ அடிப்படையாகக் கொண்டு, குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.9,000 ஆக கணக்கிடப்படுகிறது. 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலுக்கு வந்தால், ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அடிப்படை ஓய்வூதியம் ரூ. 25,740 வரை உயரக்கூடும். இது அவர்களுக்கு பெரிய நிதி பாதுகாப்பை அளிக்கும்.
சம்பளம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களுடன் கூடுதலாக, அகவிலைப்படி (DA) மற்றும் பிற சலுகைகள் புதுப்பிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்துக்கு ஏற்றவாறு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தை ஈடுசெய்வதில் DA முக்கிய பங்கு வகிக்கிறது. இது பொதுவாக வருடத்திற்கு இரண்டு முறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
மத்திய அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுபிஎஸ்-ன் கீழ், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பணியாளரின் சம்பளத்தைப் பொறுத்து ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழு அமைக்கப்படுகின்றது. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் 8வது உதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வரவேண்டுமானால், அதற்கான அறிவிப்பு இப்போது வர வேண்டியது மிக அவசியம்.
பிப்ரவரி 2025 -இல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். அப்போது அவர் 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் பற்றி அறிவிப்பார் என நம்பபடுகின்றது. பட்ஜெட் இந்த அறிவுப்புக்கான சரியான நேரமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.