EPFO: 3.0 திட்டத்தில் தற்போது ஒரு புதிய அம்சத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு ஏற்படும் குறைகள் அனைத்தும் தீர்க்க EPFO ஊழியர்களுக்கு உதவி எண் சேவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPFO: 3.0 திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்கள் முதல் செயல்முறைகள் அனைத்தும் புதிதாகச் செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில் மக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை அதாவது பிஎஃப் பணத்தை எளிதாகச் சிரமம் இல்லாமல் எடுப்பதற்காக ATM கார்ட்டு திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.பிஎஃப் உறுப்பினர்களுக்கு 2025 புதிய ஆண்டில் பலவித நற்செய்திகள் காத்திருக்கின்றன. ஊழியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) செயல்பாடுகளில் அரசாங்கம் பல மேம்பாடுகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றன.



EPFO: 3.0 UAN கணக்கு: ஆன்லைன் மூலம் பிஎஃப் உறுப்பினர்கள் தங்களின் குறைகள் அனைத்தும் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் புது வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. அதுபோன்று UAN இணைப்பதில் ஊழியர்களுக்கு நவம்பர் 31 தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டிருந்தது. இதனை நீடித்து டிசம்பர் 15வரை கூடுதல் அவகாசம் அளித்து மக்களுக்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. பி. எஃப் உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் போது அனைத்து ஊழியர்களுக்கும் ஆதார் இனி தேவையில்லை என்று சமீபத்தில் தெரிவித்துள்ளன. இது குறிப்பிட்ட ஊழியர்களின் குழுக்களுக்கு ஆதாருடன் UAN கணக்கு எண்ணை (யுஏஎன்) கட்டாயமாக இணைப்பது ரத்து செய்யப்பட்டு விலக்கு அளித்துள்ளது. 


மேலும் படிக்க | EPFO new rule : UAN இணைப்பதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க சில முக்கிய அம்சங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!


EPFO: 3.0 சிறப்பு அம்சங்கள்: பிஎஃப் ஊழியர்கள் அவர்களின் வைப்பு நிதியின் கீழ் குறிப்பிட்ட அளவுக்குப் பணம் எடுக்கும் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் கணக்கில் பிஎஃப் பணம் சேமித்து வந்தாலும் ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே எடுக்க முடியும். மீதித் தொகை வயதான காலத்தில் ஓய்வூதியப்பணத்தில் சேர்த்து வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.மத்திய அரசு செயல்படுத்தும் புதிய திட்டத்தில் சிறப்பு அம்சங்கள் அமைந்துள்ளன. அதில் இந்த உதவி எண் ஒன்றும். மக்கள் தங்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் இதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு அழைப்பு செய்து அவர்களிடம் தெளிவாகக் கேட்டுக் கொள்ளலாம்.


உதவிஎண் சேவை: மத்திய அரசு ஊழியர்களின் குறைகள் தீர்க்க 12 மொழிகளில் உதவியாளர்கள் மக்களுக்குச் சேவையாற்ற அமர்த்தப்பட்டுள்ளன.ஹிந்தி, தமிழ், ஆங்கிலம், குஜராத், கன்னடம், தெலுங்கு, மராத்தி, பஞ்சாப், மலையாளம், பெங்காலி மற்றும் ஒடிசா உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஊழியர்கள் தங்களின் வச்சத்திற்கேற்ப உங்கள் மொழியில் உரையாடலாம்.மத்திய அரசு வெளியிட்ட இந்த உதவி எண் 14470 காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சேவை இயங்கும். ஊழியர்கள் ஏதேனும் குறைகள் மற்றும் பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் இதில் தொடர்பு கொண்டு தங்களின் குறைகளுக்குத் தீர்வு காணலாம். 


மேலும் படிக்க | EPFO 3.0: ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி EPFO பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ