Pensioners Latest News: சிஜிஎஹ்எஸ் பயனாளிகளுக்கு ஒரு முக்கிய செய்தி. புதிய CGHS வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுவாச சாதனங்கள் தொடர்பான சில அத்தியாவசிய சேவைகளுக்கான ஒப்புதல் செயல்முறையை நெறிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் CPAP, BiPAP மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தொடர்பான அனுமதிகளை செயலாக்குவதற்கான ஆன்லைன் முறைக்கு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் முழுமையான மாற்றத்தை அறிவித்துள்ளது. இது குறித்த முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Central Government Health Scheme :


தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு, ஆவண தேவைகளை குறைத்து செயல்திறனை மேம்படுத்தும். இதன் மூலம் ஒப்புதல்களை விரைவுபடுத்துவதையும் பயனாளிகளுக்கு விரைவாக நிவாரணம் கிடைப்பதையும் உறுதி செய்வதை CGHS நோக்கமாகக் கொண்டுள்ளது.


Online Process: விரைவான ஒப்புதல்களுக்கான முழுமையான ஆன்லைன் செயல்முறை


அத்தகைய சாதனங்களுக்கான அனுமதி செயலாக்கத்தை ஒரு முழுமையான ஆன்லைன் பயன்முறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய உத்தரவு தெரிவிக்கின்றது. இந்தப் புதிய செயல்முறையின் கீழ், CGHS பயனாளிகள் இப்போது தங்கள் விண்ணப்பங்களை சுகாதார மையத்தில் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களில் (CGHS இணையதளத்தில் கிடைக்கும்) முறையாக நிரப்பப்பட்ட படிவம் மற்றும் பிரமாணப் பத்திரம் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும்.


விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான செயல்முறை:


- முதலில் பயனாளிகள் இணைப்பு A இன் படி தங்கள் முழுமையான விண்ணப்ப தொகுப்பை ஸ்கேன் செய்து தங்கள் மண்டலம் அல்லது நகரத்தின் சம்பந்தப்பட்ட கூடுதல் இயக்குநரின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும்.


- சுகாதார மையத்தில் அதிவேக ஸ்கேனர்கள் கிடைக்கவில்லை என்றால், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் தபால் மூலம் ஆவணங்கள் அனுப்பப்படலாம்.


- விரைவான செயலாக்கத்தை எளிதாக்க, கூடுதல் இயக்குநர்கள் அனைத்து சுகாதார மையங்களுக்கும் அதிவேக ஸ்கேனர்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


பதிவு பராமரிப்புக்கான ஈ-ஃபைல் அமைப்பு


- வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக, அனைத்து விண்ணப்பங்களும் மின்னணு கோப்பு அதாவது ஈ-ஃபைல் முறைமை மூலம் செயலாக்கப்பட வேண்டும் என்று அமைச்சகம் கட்டளையிட்டுள்ளது. 
- ஈ-ஃபைல் -இம் ‘சப்ஜெக்ட் மேட்டரில்’ பயனாளியின் பெயர் மற்றும் பயனாளி ஐடி ஆகியவை இருக்க வேண்டும். இதன் பிறகு, பயனாளிக்கு வழங்கப்படும் அனைத்து சுவாச சாதனங்களும் அதே ஈ-ஃபைலில் வைக்கப்பட வேண்டும்.
- இது அனுமதிகளின் டிஜிட்டல் பதிவைப் பராமரிப்பதற்கும் ஒப்புதல்களின் நிலையைக் கண்காணிப்பதற்கும் உதவும்.
- கூடுதலாக, சிறந்த கண்காணிப்புக்காக மின்-கோப்பு எண், பயனாளி ஐடி மற்றும் அனுமதி விவரங்கள் போன்ற விவரங்களைக் கொண்ட எக்செல் தாள் ஒன்றும் பராமரிக்கப்படும்.


ஒப்புதல் செயல்முறை 


விண்ணப்பம் பெறப்பட்டதும், கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பிரிவு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதை கண்டறிய அதை ஆய்வு செய்யும். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதே நாளில் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் பயனாளிக்கு தெரிவிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பின்னர் சுவாச மருத்துவ நிபுணர்கள் குழுவிற்கு மதிப்பாய்வுக்கு அனுப்பப்படும். குழுவின் பரிந்துரை eFile இல் பதிவேற்றப்பட்டு CGHS தலைமையகத்திற்கும், சம்பந்தப்பட்ட நகரம்/மண்டலத்தின் கூடுதல் இயக்குநருக்கும் அனுப்பப்படும்.


டிஜிட்டல் ஒப்புதல்


விண்ணப்பம் குறித்த முடிவு எடுக்கப்பட்டவுடன், பயனாளி eOffice வழியாக கூடுதல் இயக்குநரிடமிருந்து டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஒப்புதல் அல்லது நிராகரிப்பு கடிதத்தைப் பெறுவார். அனுமதியின் சாஃப்ட் காபி பயனாளிக்கு அவரது மின்னஞ்சலில் அனுப்பப்படும். அல்லது பயனாளி அதை நேரடியாக வந்தும் பெற்றுக்கொள்ளலாம்.


CGHS Beneficiaries: சிஜிஎச்எஸ் பயனாளிகள்


இந்த முழு செயல்முறையும் தற்போது ஆன்லைன் அமைப்புக்கு மாறியுள்ளதால், இதற்கு ஆகும் செயலாக்க நேரம் இனி கணிசமாகக் குறையும். இதன் மூலம் காகித முறையில் உள்ள சிக்கல்கள் நீங்கும் என்றும் CGHS பயனாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை சுகாதார சேவைகளில் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய அரசாங்கத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றது.


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: லெவல் 1 முதல் லெவல் 10 வரை.... யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு விவரம் இதோ


மேலும் படிக்க | UPS: அரசு ஊழிர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், ஓய்வூதிய கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ