உங்கள் வாழ்க்கையை மாற்றும் இந்த மூன்று மந்திரம்! சாணக்கிய நீதி சொல்வது என்ன?
Chanakya Niti: உங்களை நோக்கி துக்கம் சூழும் போது நீங்கள் பொறுமையாக இருந்தால், எந்தவித கடினமான சூழ்நிலைகளையும் சாமார்த்தியமாக வென்று மகிழ்ச்சியாக இருக்கலாம் சாணக்கியர் நீதி கூறுகிறது.
Chanakya Niti: எல்லோரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை விரும்புகிறார்கள். ஆனால் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இன்பம், துன்பம், நல்லது, கெட்டது என மாறிமாறி வருவது இயல்பு. அதைதான் வரலாறும் நமக்கு உணர்த்துகிறது. இப்படி நமது வாழ்க்கையில் சுழன்றுகொண்டு இருக்கும் இரண்டு பக்கங்களையும் எல்லோரும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்களை நோக்கி துக்கம் சூழும் போது நீங்கள் பொறுமையாக இருந்தால், எந்தவித கடினமான சூழ்நிலைகளையும் சாமார்த்தியமாக வென்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என நீதி நூல்களும், உலகில் சாதித்த பலரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது.
கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது
கடின உழைப்பு என இருப்பவர்களுக்கு லட்சுமியின் கருணை இருக்கும் என சாணக்கியர் கூறுகிறார். வாழ்க்கையில் கடினமாக உழைத்து, பொறுமையை கடைபிடிப்பவர்களுக்கு பணத்திற்கு பஞ்சமிருக்காதாம். இந்த குணங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்து கொடுக்குமாம்.
நிதிச்சிக்கல் சமாளிப்பது எப்படி
கடின உழைப்பாளிகளும் நிதிச்சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் அந்த உழைப்பு மூலம் கிடைத்த பணத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அனுபவிக்கிறார்கள். கடின உழைப்பாளிகளுக்கு சமூகத்தில் எப்போதும் அந்தஸ்து இருக்கும் என கூறும் சாணக்கியர், அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறாமல் இருப்பதில்லை எனக் கூறுகிறார்.
மேலும் படிக்க: Financial Tips: பணத்தை திட்டமிட்டு சேமித்து பணக்காரர் ஆக சில டிப்ஸ்
சேமிப்பு திட்டம் -பணத்தை எவ்வாறு சேமிப்பது
சேமிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க கற்றுக் கொள்ள வேண்டும். கையில் இருக்கும் பணத்தை புத்திசாலித்தனமாக செலவிட தெரிந்திருக்க வேண்டும். இதன்மூலம் அசாதாரண நிதிச் சிக்கல்களை நீங்கள் தவிர்க்கலாம். சிறிய சேமிப்புகள்கூட ஒரு காலத்தில் உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளைக் கொடுக்கும் என்கிறார் சாணக்கியர்.
(பின்குறிப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை)
மேலும் படிக்க: முதலீட்டு டிப்ஸ்: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 15 x 15 x 15 பார்முலா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR