சென்னை: தோஹாவுக்கு அனுப்பவிருந்த சரக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போதைப் பொருள் கடத்தல் தொடர்பான உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் கத்தார் (Qatar), செல்லவிருந்த சரக்குகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் இருப்பதை சென்னை விமான சரக்கு போக்குவரத்து சுங்க அதிகாரிகள் (Air Cargo Customs officials) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரக்கு ஆவணங்களின்படி, 55 weighing scales அளவுகள் கொண்ட 7 பார்சல்கள் இருந்ததாக கூறப்பட்டிருந்தது.


டிஜிட்டல் அளவுகளின் எடை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில், அனைத்து சரக்குப் பொதிகளும் பிரிக்கப்பட்டன.


Also Read | மருத்துவத் துறைக்கு பெரிய உந்துதல்: பல்வேறு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் EPS


டேப் மூலம் சீல் செய்யப்பட்ட பெட்டிகளில் உலோக இயந்திரங்கள் இருந்தன. அவற்றுள் பிளாஸ்டிக் கீற்றுகள் மற்றும் தாள்களால் மூடப்பட்ட கேக் வடிவத்தில் இருண்ட பழுப்பு நிறப் பொருட்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பழுப்பு நிற பொருள் ஹஷிஷ் (Hashish) என்ற போதைப்பொருள் என்று கண்டறியப்பட்டது. மொத்தம் 44 கிலோ Hashish, 44 இயந்திரங்களில் இருந்து மீட்கப்பட்டது.


இரண்டு இயந்திரங்களில் இருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிராம் மெதபெட்டமைன் படிகங்கள் (Methaphetamine crystals) மீட்கப்பட்டது. ஹஷிஷ் மற்றும் மெதபெட்டமைன் படிகங்கள் இரண்டும் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு 5.1 கோடி ரூபாய், அமெரிக்க டாலர்களின் இதன் மதிப்பு 6.99 லட்சம் ஆகும்.


 Also Read | யூனிட் 731: இரண்டாம் உலகப்போரின் ரத்தம் தோய்ந்த பக்கங்கள்


இவற்றைத் தவிர, கவலைக் கோளாறு (anxiety disorder) மற்றும் ஃபைப்ரோமில்ஜியா (fibromylgia) ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் 1620 கிராம் ப்ரீகாபலின் காப்ஸ்யூல்கள் (Pregabalin capsules), மருந்துகள் 6 இயந்திரங்களில் இருந்து மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மருந்து இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்து பட்டியலில் வரவில்லை என்றாலும், இது பல வெளிநாடுகளில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சரக்குகளை தோஹாவுக்கு அனுப்பிய ஏற்றுமதியாளர் M / s ஸ்ரீ ஆலயா (M/s Sree Aalaya) நிறுவனத்தின் வளாகத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அதோடு, சுங்கத்துறை  முகவர் ஒருவரின் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.


Also Read | B-1 bomber விமானங்கள் மூலம் ரஷ்யாவுக்கு பதில் கொடுக்கும் Joe Biden


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR