இந்தியாவில் எவ்வளவு வேற்றுமைகள் இருந்தாலும், உணவு என்று வந்துவிட்டால் பல பொது தன்மைகள் வந்துவிடும். வட இந்தியா, தென்னிந்தியா என அனைத்து இடங்களிலும் இனிப்பு, கார உணவுகள் வேறுபட்டாலும், தோசை, பிரியாணி போன்றவை நாட்டின் பெரும் பகுதியில் பிடித்தமான உணவு வகையாகதான் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைதான், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி வெளியிட்ட இந்தாண்டு அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும், ஸ்விகி நிறுவனம், ஆண்டின் டிரெண்ட் ரிபோர்டை (முன்பு, statEATstics) வெளியிடும். அதாவது, ஓர் ஆண்டில், வாடிக்கையாளர்களின் எதனை அதிகம் ஆர்டர் செய்து உண்கிறார்கள் என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம். 


இந்தாண்டுக்கான ஸ்விகி ரிபோர்ட் தற்போது வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவாக பிரியாணி உள்ளது. அதாவது, ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.25 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதல் இடத்தில் சிக்கன் பிரியாணி உள்ளது. மேலும், மசால் தோசை, சிக்கன் ப்ரைடு ரைஸ் உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


மேலும் படிக்க | Ration Card: ஒரே நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி, அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு உணவிலும் இந்தியர்கள் அதிகம் நாட்டம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியன் ரவியோலி, கொரியன் பிபிம்பாப் ஆகியவற்றின் மீதான ஈர்ப்பு தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்விகி இன்ஸ்டாஸ்மார்ட் சேவை மூலம், டீ, ரொட்டி வகைகள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்


சிக்கன் பிரியாணி, மசாலா தோசை, சிக்கன் ப்ரைடு ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன்.


அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட வெளிநாட்டு உணவுகள்


இத்தாலிய பாஸ்தா, பீஸ்ஸா, மெக்சிகன் பவுள், காரமான ரமேன் மற்றும் சுஷி


டாப் 10 நொறுக்குத்தீனிகள்


சமோசா, பாப்கார்ன், பாவ் பாஜி, ஃபிரஞ்சு ஃபிரைஸ், பூண்டு பிரட்ஸ்டிக்ஸ, Hot wings, டகோ, கிளாசிக் ஸ்டஃப்டு பூண்டு ரொட்டி, மிங்கிள்ஸ் பக்கெட்


டாப் 10 இனிப்பு வகைகள்


குலாப் ஜாமூன், ரஸமலாய், சாக்கோ லாவா கேக், ரஸகுல்லா, சாக்கோ சிப்ஸ் ஐஸ்கிரீம், அல்போன்சோ மேங்கோ ஐஸ்கிரீம், காஜு கட்லி, இளந்தேங்காய் ஐஸ்கிரீம், Death by Chocolate, ஹாட் சாக்லேட் ஃபட்ஜ்


மேலும், ஸ்விகி இன்ஸ்டாஸ்மார்ட் பல சேட்டைகளையும் இந்தியர்கள் செய்துள்ளதாக ஸ்விகி செய்துள்ளது. ஸ்விகி இன்ஸ்டாஸ்மார்ட் தேடலில், பெட்ரோல், அம்மா, சோஃபா, மெத்தைகள், உள்ளாடைகள் போன்றவற்றை அதிகம் தேடியுள்ளதாக தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | ரயில் உணவு குறித்து முக்கிய அப்டேட், உடனே இதை படியுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ