சீனா-யு.எஸ். உறவில் விரிசல்.. குறைந்து வந்த தங்கத்தின் விலை அதிகரிப்பு
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் விரிசல், உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளை மேலும் பாதிக்கலாம். ஏற்கனவே கொரோனோ வைரஸ் நெருக்கடியின் காரணமாக கடுமையான பாதிப்பு உள்ளது.
ஹாங்காங்: கடந்த இரண்டு வாரங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, ஹாங்காங் சர்ச்சை தொடர்பாக, வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான உறவில், மேலும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் வியாழக்கிழமை தங்கத்தின் விலை சரிந்தது. தொற்று நோய் பாதிப்பினால் தாக்கம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நேரப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 0.6% அதிகரித்து 1,718.67 டாலராக இருந்தது. இது புதன்கிழமை 1,693.22 டாலராக இருந்தது. அமெரிக்க தங்க சந்தையில், தங்கம் விலை 0.4% அதிகரித்து 1,717.70 டாலராக உள்ளது.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் விரிசல், உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளை மேலும் பாதிக்கலாம். ஏற்கனவே கொரோனோ வைரஸ் நெருக்கடியின் காரணமாக கடுமையான பாதிப்பு உள்ளது.
“அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் பல தரப்பில், கருத்து வேறுபாடு உள்ளது. வியாபாரம், கொரோனோ தொற்று குறித்த பிரச்சனைகள், இப்போது ஹாங்காங் தொடர்பாகவும் ஒரு சர்ச்சை உள்ளது” என்று சிஎம்சி சந்தைகளின் தலைமை மூலோபாய நிபுணர் மைக்கேல் மெக்கார்த்தி கூறினார்.
"இது வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், உலகளாவிய வளர்ச்சியில் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், இது உலகிற்கு ஒரு கெட்ட செய்தியாகும். உலக பொருளாதாரங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது."
புதன்கிழமையன்று, அமெரிக்க சட்டத்தின் கீழ் ஹாங்காங்-கிற்கு, சிறப்பு அந்தஸ்து இனி வழங்கப்படாது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறினார். அதே நேரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த வாரம், பதில் அறிவிப்பதாக கூறினார்.
“ஹாங்காங் தொடர்பான சீனாவின் புதிய பாதுகாப்புச் சட்டங்களுக்கு அமெரிக்கா பதிலளிக்கும். பலவீனமான பொருளாதாரம் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் தங்க விலை அதிகரிக்க காரணம்” என்று தேசிய ஆஸ்திரேலியா வங்கியின் பொருளாதார நிபுணர் ஜான் சர்மா கூறினார்.
ஜப்பான் 1.1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்க திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது, ஐரோப்பிய ஒன்றியம் 750 பில்லியன் யூரோ மதிப்பிலான திட்டத்தை வெளியிட்டது.
ஊக்கம் அளிக்கும் வகையிலான பெரிய திட்டங்கள், தங்கவிலை அதிகரிக்க காரணமாக உள்ளது. இது பெரும்பாலும் பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பு குறைவு ஆகியவற்றுக்கு எதிரான வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.
முதலீட்டாளர்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், உலகின் மிகப் பெரிய தங்க பரிமாற்ற-வர்த்தக நிதியான எஸ்பிடிஆர் கோல்ட் டிரஸ்ட் ஹோல்டிங்ஸ் நிதி, புதன்கிழமை, ஏழு ஆண்டுகளில் அதிகபட்சமாக 0.2% அதிகரித்து 1,119.05 டன்னாக உள்ளது.
பல்லேடியம் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 1.8% உயர்ந்து 1,970.79 டாலராகவும், பிளாட்டினம் விலை 2.1% அதிகரித்து 836.46 டாலராகவும், வெள்ளியில் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் 17.29 டாலராகவும் இருந்தது.
(மொழியாக்கம் : சரிதா சேகர்)