கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசால் நடத்தப்படும் இலவச ரேஷன் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார். சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில், நாட்டின் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை பாஜக அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார். நாட்டின் 80 கோடி ஏழை மக்களுக்கு உணவு உத்தரவாதம் அளிக்கும் இத்திட்டத்திற்கு அரசு கருவூலத்தில் இருந்து செலவாகும் தொகையும் அதிகம். 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் கூறிய போது, இத்திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி செலவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். அடுத்த ஐந்தாண்டுகளில் அரசு கருவூலத்தில் இந்தத் திட்டம் எவ்வளவு சுமையை அதிகரிக்கும் என்பதையும், இதுவரை எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பதையும் புரிந்துகொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்ட திட்டம்


பட்ஜெட்-2023ல் தனது உரையின் போது, ​​மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டத்தை ஓராண்டுக்கு அதாவது 2023 டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர் மோடி (PM Narendra Modi) அறிவித்துள்ளார். இத்திட்டம் 30 ஜூன் 2020 அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அதன் காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் சமீபத்திய அறிவிப்புக்குப் பிறகு, இப்போது இந்த திட்டத்தின் பலன்கள் டிசம்பர் 2028 வரை கிடைக்கும்.


கொரோனா காலத்தில் கைகொடுத்த திட்டம்


2020 ஆம் ஆண்டில், கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவி வருகையில், ​​இந்தியாவும் லாக்டவுன் உட்பட பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால், பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டது. இதன் காரணமாக, மக்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டனர் மற்றும் ஏழைகள் உணவு கூட வாங்க முடியாமல் திணறினர். இந்தச் சூழலைச் சமாளிக்க அரசு பெரும் நடவடிக்கை எடுத்து இலவச ரேஷன் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சுமார் 80 கோடி மக்களுக்கு தொடக்கத்தில் இருந்து இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) கீழ், பயனாளிகளுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் முற்றிலும் இலவசம். இதன்படி, பிபிஎல் கார்டு உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு 4 கிலோ கோதுமை மற்றும் 1 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | தீபாவளி போனஸ்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி... அறிவிப்பு வெளியானது!!


இலவச ரேஷன் திட்டத்திற்காக 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி செலவு


நடப்பு நிதியாண்டில் இந்த இலவச ரேஷன் திட்டத்திற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார். இந்த பட்ஜெட் மதிப்பீட்டை மட்டும் பார்த்தால், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தை 2028 வரை நீட்டிப்பதால், அரசு கருவூலத்தில் உயரப் போகும் சுமை, 10 லட்சம் கோடி ரூபாய். உணவுப் பாதுகாப்புக்காக இந்திய அரசின் இந்தச் செலவினம் பல சிறிய நாடுகளின் ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில், இந்த இலவச ரேஷன் திட்டத்திற்கான பட்ஜெட் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, ஆனால் அதன் பிறகு அது அரசாங்கத்தால் ஆண்டுதோறும் குறைக்கப்பட்டது.


திட்டம் தொடங்கப்பட்ட பிறகு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் புள்ளிவிவரங்கள்


நிதியாண்டு இலவச ரேஷன் திட்டத்தின் பட்ஜெட்
2020-21 ரூ 5,41,330 கோடி
2021-22 ரூ 2,88,969 கோடி
2022-23 ரூ 2,87,194 கோடி
2023-24 ரூ 1,97,350 கோடி

பொருளாதாரம் மீண்டு வந்தாலும் தொடரும் நிவாரணம்


பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மோடி அரசாங்கத்தின் மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, மேலும், கொரோனா தொற்றுநோயின் காலகட்டத்தில், இந்த திட்டம் யாரும் பசியினால் வாடாத வகையில் செயல்பட்டது. நாட்டில் அப்படி ஒரு நிலை ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை.இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு அரசு தொடர்ந்து நிவாரணம் அளித்து வருகிறது. தற்போது நாட்டின் பொருளாதாரம் கொரோனாவின் நிழலில் இருந்து முழுமையாக மீண்டு வருவதால் ஏழைகளுக்கு அரசு தொடர்ந்து நிவாரணம் வழங்கி வருகிறது. 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரும் லாபகரமான் மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ