Tamilnadu Today Live : தமிழ்நாட்டிற்கு புயல் பாதிப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்துவிட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சென்னைக்கு அருகே கரையை கடக்க உள்ளது. இருப்பினும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் நேரலையை இங்கே காணலாம்.