நாட்டில் பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், மக்கள் இப்போது மின்சார வாகனங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மின்சார வாகன பிரிவில் புதிய ஸ்டார்ட் அப்-கள் பல வரும் நாட்களில் வரவுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படிப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப்-பான (Start up) கபிரா மொபிலிட்டி சந்தையில் நுழைந்துள்ளது. இந்நிறுவனம் KM3000 மற்றும் KM4000 ஆகிய இரண்டு புதிய மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை முறையே 1,26,990 ரூபாய் மற்றும் 1,36,990 ரூபாயாகும். KM 3000 ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் ஆகும். KM4000 ஒரு ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த இரண்டு பைக்குகளும் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இந்த பைக்குகளைப் பற்றி இங்கே காணலாம்.


ALSO READ: Tata safari 2021 price: காரின் விலை மற்றும் அம்சங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்


KM 3000 பைக்கின் ரேஞ் 120 கி.மீ


KM 3000 மற்றும் KM4000 ஆகிய இரண்டிலும் மூன்று ரைடிங் மோடுகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஈகோ, ரைட் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்குகின்றன. KM 3000 –ல் DeltaEV-யிவிலிருந்து பெறப்பட்ட 3500 W BLDC ஹப் மோட்டார் மற்றும் 4.0 kWh லி-அயன் பேட்டரியைப் பயன்படுத்தப்படுகிறது.  இந்த பைக் மணிக்கு 100 கிமீ வேகத்தில் ஓடும் என்று கூறப்படுகிறது. இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள ஈகோ மோடில் இந்த பைக் ஒரே சார்ஜிங்கில் 120 கி.மீ வரையிலான ரேஞ்சை வழங்குகிறது.


இந்த பைக்குகள் ஆறரை மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் (Charging) செய்யப்படுகின்றன. அதே நேரத்தில், பூஸ்ட் பயன்முறையில், இவற்றை 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடலாம்.


KM 4000 ஒரே சார்ஜிங்கில் 150 கி.மீ. செல்லும்


KM 4000 பற்றி பேசுகையில், இது Delta EV 5000 W BLDC ஹப் மோட்டார் மற்றும் 4.4 kWh லி-அயன் பேட்டரி கொண்டுள்ளது. இது மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்கிறது. இந்த பைக் ஈகோ பயன்முறையில் 150 கி.மீ என்ற ரேஞ்சை வழங்குகிறது. இந்த இரண்டு எலக்ட்ரிக் பைக்குகளின் (Electric Bike) முன்பதிவு பிப்ரவரி 20 முதல் தொடங்கியது. நிறுவனம் தற்போது ஒன்பது நகரங்களில் இவற்றை விற்பனை செய்யும். டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத், அகமதாபாத், சென்னை, பெங்களூர், கோவா மற்றும் தார்வாட் ஆகிய நகரங்கள் இதில் அடங்கும். இந்த பைக்குகளின் விநியோகம் இந்த ஆண்டு மே முதல் தொடங்கும்.


ALSO READ: Make in India-வின் கீழ் இந்தியாவில் விரைவில் வருகின்றன Ola Cars, Ola Scooters!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR