மார்ச் காலாண்டு  வணிகத்தில் கோவிட் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என ஷிஷிர் ஜோஷிபுரா, பிரஜ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஷிஷிர் ஜோஷிபுரா. ஜீ பிசினெஸ் தொலைகாட்சியின்  சுவாதி கண்டேல்வால், ஷிஷிர் ஜோஷிபுராவுடன் அவரது  நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் மற்றும்  2021 ஆம் நிதியாண்டுக்கான கண்ணோட்டம் குறித்து   உரையாடினார்.  


கேள்வி: கடந்த மார்ச் காலாண்டில் பிரஜ் இண்டஸ்ட்ரீசின்  லாபம் 33 கோடி ரூபாயிலிருந்து 25 கோடி என்ற அளவில் குறைந்துள்ளது.  அதோடு,  லாபத்திலும்  சுணக்கம்  ஏற்பட்டுள்ளது.  இந்த காலாண்டில் EBITDA  என்னும் உற்பத்திக்கு பின்னதான வரி விதிப்புக்கு முன்னதான லாபத்தில் சுணக்கம் ஏற்ப்பட்டதற்கு  காரணம் என்ன?  


பதில்: COVID-19 இன் தாக்கம் இந்த காலாண்டில் மிகப்பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  மார்ச் 15 முதல் எங்கள்  நிறுவனத்தின் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். நடப்பு  நிதியாண்டின் கடைசி 15 நாட்கள் திட்டமிட்டபடி   விநியோகங்களை  மேற்கொள்வதற்கு முக்கியமான காலகட்டம்.  சர்வதேச சந்தைகளைப் பொருத்தவரை, COVID இன் தாக்கம் நம் நாட்டிற்கு முன்பே பல நாடுகளை எட்டிவிட்டது.    கொரோனாவின் ஆரம்ப காலகட்டத்தில் வாடிக்கையாளர்களுடன் பணியாற்றுவதில் பல சிரமங்களை ஏற்படுத்தியது. இதுபோன்ற பல விஷயங்கள் நிதியாண்டின் கடைசி 15 நாட்களில் எங்களுடைய வணிகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி  விட்டன . எனவே, இந்த காலாண்டிற்கான தரவுகளை ஒப்பிட முடியாது.  


கடந்த 5 ஆண்டுகளில் விற்பனை அதாவது ஒட்டுமொத்த ஆண்டின் வளர்ச்சி விகிதமான CAGR  வெறும்  3%  மட்டுமே அதிகரித்துள்ளது.


கேள்வி: தற்போதைய சூழ்நிலையில் விற்பனையை நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள், 2021 ஆம் நிதியாண்டுக்கான  வழிகாட்டுதல்கள்  என்னவாக இருக்கும்?


பதில்: COVID க்கு பிந்தைய காலத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். அரசாங்கம்  மிகவும் முற்போக்கான கொள்கைகளை  உயிரி எரிபொருட்களுக்கான தேசிய கொள்கை என்ற பெயரில் அறிவித்தது. அதிலிருந்த சில சிக்கல்களுக்கு பின்னர்  தீர்வும்   காணப்பட்டு  விட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 511 கோடி லிட்டர் எத்தனால் தொடர்பாகவும், அதற்காக, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனம் ஓ.எம்.சி-க்கு   190 கோடி லிட்டர் எத்தனால் வழங்கப்பட்டிருப்பதும் உங்களுக்குத் தெரியும்.   தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதையே இது காட்டுகிறது.  உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதையே இது காட்டுகிறது.   இந்த இடைவெளி புதியத் திறன் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன். இதைத் தவிர, சர்க்கரை நிறுவனங்களுக்கு மிக முக்கியமான துணை உற்பத்தி  பொருளாக எத்தனால் மாறியுள்ளது, அவர்களிடம்  பண இருப்பை அதிகரிக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும்  இது உதவியாக இருக்கிறது. எனவே, சர்க்கரை ஆலைகள் இயல்பாகவே  எத்தனால்  உற்பத்தி நிறுவனங்களாக


இருக்கின்றன. எனவே சர்க்கரை உற்பத்தி ஆலைகள், இயல்பாகவே எத்தனால் ஆலைகளின்   உரிமையாளர்களாகி  உள்ளனர்..


கேள்வி: சர்க்கரை ஆலைகளின் கரும்பு நிலுவைத் தொகையை வழங்க,   கூடுதல் மற்றும் எளிய  கடன்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது சர்க்கரைத் துறை மற்றும் உங்கள் நிறுவனத்தில்  எதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்?


பதில்: இந்திய அரசாங்கம் முற்போக்கான கொள்கைகளை அறிவித்துள்ளது என்று நான் கூறியது போல, இதுவும் எதிர்காலத்தில் இந்தத் துறையில் சிறப்பான திறன் உருவாக்கத்திற்கு  வழிவகுக்கும் என்று நான் நினைக்கிறேன். அரசாங்கத்தால் வழங்கப்படும் ஊக்கத்தொகையானது,    திட்டங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும். சமீபத்திய மற்றும்  எதிர்காலத்தில் பயோகேஸ் எனப்படும் உயிர்வாயுவுக்கும் (Biogas) இதே போன்ற கொள்கைகள் அறிவிக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதோடு, பல சர்வதேச சந்தைகளிலும் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை   பார்க்க முடிகிறது.


- (மொழியாக்கம்) வானதி கிரிராஜ்.