India Taxation System: மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, தொழிலதிபராக இருந்தாலும் சரி, மாத சம்பளம் வாங்கும் நபராக இருந்தாலும் சரி, ஈட்டிய பணத்திற்கான வரியை செலுத்த பெரும்பாலும் யாருக்கும் பிடிப்பதில்லை. பல்வேறு வழிகளில் வரியை தவிர்க்கவும், வரிச் சலுகை பெறவும்தான் பலர் விரும்புகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை அப்படியே தூக்கி அரசுக்கு கொடுக்க வேண்டியுள்ளதால், அரசாங்கத்தின் வரிவிதிப்பு முறை குறித்து மக்கள் அடிக்கடி புகார்  கூறுகின்றனர். பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்டால் அரசாங்கத்தை புகழ்வதும், சாதகமான வரிச்சலுகைகள் கிடைக்கவில்லை என்றால் அரசை விமர்சிப்பதும் காலம் காலமாக நடந்து வருவதுதான். 


இந்த நிலையில், வரி செலுத்துவோரது (Taxpayers) காதுகளில் தேனாகப் பாயும் ஒரு செய்தியை நிதி அமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அதிக வரி விதிப்பு புகார்களுக்கு மத்தியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), வரியை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைப்பதே தனது நோக்கம் என்று கூறியுள்ளார். ஆனால் நாடு பல வித சவால்களை எதிர்கொண்டு வருகின்றது என்றும், வளங்களை திரட்ட வேண்டிய அவசியம் தற்போது உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அதிகபட்ச பணத்தை செலவிட உதவும் என அவர் கூறினார். 


பல முறை, நிதி அமைச்சராக இருந்துள்ளதால், நம் வரி விதிப்பு முறை ஏன் இப்படி இருக்கிறது என்று மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் தகுந்த பதிலை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சேமிப்பு பற்றிய ஆராய்ச்சிகளை செய்ய விஞ்ஞானிகளுக்கு முறையீடு 


போபாலில் உள்ள ஐஐஎஸ்இஆர்-இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 11வது பட்டமளிப்பு விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர், 'நம்மால் ஏன் வரியை குறைக்க முடியாது? நான் அதை பூஜ்ஜியமாக்க விரும்புகிறேன். ஆனால் நாட்டின் சவால்கள் மிகவும் தீவிரமானவை. அவற்றை நாம் முறியடிக்க வேண்டும்.’ என்று கூறினார்.


‘இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டை நடத்த பணம் வேண்டும் என்பதால், வரியை பூஜ்ஜியமாக்குவது சாத்தியம் அல்ல’ என நிதியமைச்சர் மேலும் தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அதன் சேமிப்பு குறித்து அதிகபட்ச ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அவர் விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவிற்கும் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கும் இது மிகவும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.


மேலும் படிக்க | PF கணக்குகள், ஓய்வூதியம், TDS... நேரலை அமர்வில் முக்கிய அப்டேட்களை அளித்த EPFO


பாரிஸ் ஒப்பந்தப் பணம் இன்னும் வரவில்லை: நிதி அமைச்சர்


வளர்ந்த நாடுகள் பலமுறை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். இந்த மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 'புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கு அதிக நிதி அளிக்கப்படும் என உறுதி அளிக்க்கப்பட்டது. ஆனால் அந்த பணம் இன்னும் வரவில்லை. பாரீஸ் ஒப்பந்தத்தில் அளித்த வாக்குறுதிகளை இந்தியா தனது சொந்தப் பணத்தில் நிறைவேற்றியுள்ளது.’ என்று கூறினார். 


இந்த நிகழ்வில், நாட்டின் தற்போதைய வரிவிதிப்பு முறையை நிதியமைச்சர் நியாயப்படுத்தி பேசினார். அறிவியல் ஆராய்ச்சியில் அரசு பெரும் முதலீடு செய்து வருகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 


நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'நாட்டின் சவால்களைப் புரிந்துகொள்ளும் பட்டதாரிகளும், முனைவர் பட்டம் பெற்றவர்களும் எனக்கு முன்னால் பணிகளை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கான நிலையான ஆற்றல் ஆதாரங்களில் ஒன்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நான் உதாரணமாக எடுத்துக்கொள்கிறேன். ’ என்று தெரிவித்தார்.


‘புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது நிலையான ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சேமிப்பிற்கான பேட்டரிகளை உருவாக்க விஞ்ஞானிகள் அதிக அளவில் முன்வர வேண்டும்’ என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்.... மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ