கடந்த நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முந்தைய ஏலங்களில் இல்லாத வகையில் பல இளம் வீரர்களை அணியில் எடுத்துள்ளனர். இதனால் தங்களது முன்னணி வீரர்களை அணியில் எடுக்க தவறியுள்ளனர்.
சான்டனர்: நியூசிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் மிட்சல் சான்டனர் நீண்ட நாட்களாக சென்னை அணியில் இருந்தாலும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தங்களது அணியில் எடுத்துள்ளது.
தீக்ஷனா: இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் தீக்ஷனா சென்னை அணிக்கு பவர் பிளேயரில் வந்து பிசி வந்தார். இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
துஷார் தேஷ்பாண்டே: கடந்த இரண்டு சீசன்களாக துஷார் தேஷ்பாண்டே சென்னை அணிக்கு பந்து வீசி வருகிறார். இந்த ஆண்டும் சில போட்டிகளில் நன்றாகவே பந்து வீசி இருந்தார். இருப்பினும் இந்த ஏலத்தில் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
தீபக் சஹார்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 7 ஆண்டுகளாக விளையாடி வருகிறார் தீபக் சஹார். ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வேக பந்துவீச்சாளராகவும் இருந்தார். ஆனால் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.
மொயின் அலி: கடந்த சில சீசன்களாக சென்னை அணிக்காக விளையாடி வந்தார் மொயின் அலி. ஆனால் இந்த முறை மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஷர்துல் தாகூர்: 2018 முதல் 2021 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் தாகூர். 2023 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடியவர். இந்த ஆண்டு நடைபெற்ற மினி எழுத்தில் மீண்டும் சென்னை அணியில் இணைந்தார். ஆனால் மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை.