கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாதிப்புகளில் இருந்து உலகம் மீள்வதற்கு எத்தனை தசாப்த்தங்கள் ஆகும் என்று தெரியாது. ஆனால் கொரோனாவின் எதிரொலியால் ஏற்பட்ட மாற்றங்களில் ஒரேயொரு நன்மை மட்டும் கண்ணுக்குத் தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2020ஆம் ஆண்டில் இந்தியாவில் சைக்கிள் ஓட்டும் புரட்சியே ஏற்பட்டது என்று கூறலாம். குறுகிய தொலைவு பயணிப்பதற்கு இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் மிதிவண்டியை அதாவது சைக்கிள் பயன்பாட்டினால் இந்திய பொருளாதாரத்தில்1.8 டிரில்லியன் ரூபாய் அளவு மிச்சப்படுத்தலாம் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.


போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கை நிறுவனம் (Institute for Transportation and Development) படி, கொரோனா வைரஸ் பரவலின்போது, இந்தியாவில் சைக்கிள் ஓட்டும் புரட்சியே ஏற்பட்டுள்ளது.   40 க்கும் மேற்பட்ட நகரங்கள் சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிக்கும் யோசனைகளைக் கற்றுக் கொண்டன.


Also Read | வருமான வரியை தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம்


இந்த இந்திய நகரங்களில் மிதிவண்டிக்காக தனிப்பாதைகள் 400 கி.மீ மற்றும் 3500 கி.மீ துணைப்பாதைகள் அமைக்கும் பணிகள் கூட்டாகத் தொடங்கப்பட்டன. India Cycles4Change Challenge முதல் கட்டத்தின் கீழ் இது அடையப்பட்டது, அங்கு ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் பல்வேறு சைக்கிள் ஓட்டுதல் தொடர்பான முயற்சிகளை செயல்படுத்த நகரங்களுக்கு பயிற்சி அளித்தது.


மார்ச் 2020 முதல் இந்தியாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மக்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்தன. சாலைகளில் வாகனங்கள் ஓட்டுவதற்கான கட்டுப்பாடுகள், சைக்கிள் ஓட்டுதலில் உற்சாகத்தை அதிகரித்தது. பொது போக்குவரத்து கிட்டத்தட்ட இடைநிறுத்தப்பட்ட நிலையில், குறுகிய மற்றும் நடுத்தர தூர பயணங்களுக்கு சைக்கிளில் செல்வது பாதுகாப்பானதாக நினைக்கும் காலம் வந்தது.  


2020ஆம் ஆண்டில், இந்தியாவின் சைக்கிள் ஓட்டுதல் புரட்சி ஏற்பட்டது என ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் இணை செயலாளரும், மிஷன் இயக்குநருமான குணால் குமார் ஐ.ஏ.எஸ்., தெரிவித்தார். நகரங்களும் குடிமக்களும் கைக்கோர்த்து நகரங்களை சைக்கிள் ஓட்டுவதற்கு உகந்த இடமாக மாற்றுவதற்கான யோசனைகளை முன்வைத்தார்.  


Also Read | AIDS பாதித்த பெண்ணுக்கு 6 மாதங்களாக கோவிட், என்ன நடந்தது?


இப்போது பெரும்பாலான மக்கள் சைக்கிள் ஓட்டுகின்றனர். நகர அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வேலைக்கு சைக்கிளில் செல்வதன் மூலம் மற்றவர்களுக்கு உந்துதலாக இருப்பார்கள். மாநிலங்கள் இந்த முயற்சியை முதலீடுகளுடன் ஆதரிக்கின்றன" என்று குணால் குமார் ஐ.ஏ.எஸ்., கூறினார், மேலும் பல நகரங்கள் இந்த இயக்கத்தில் சேர வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார்.


இந்திய நகரங்களை சைக்கிள் ஓட்டுவதற்கு நட்பாக மாற்றுவதற்கான முயற்சிகள் குடிமக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் கருத்துக் கணிப்புகளுடன் தொடங்கியது. இதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து தபால்காரர்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் சுமார் 60,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


சாலைகளில் மிதிவண்டிகளுக்கு என பிரத்யேக சைக்கிள் பாதைகளை உருவாக்கினர். புவனேஸ்வர், சூரத், கொச்சி, கிரேட்டர் வாரங்கல் (Bhubaneswar, Surat, Kochi, Greater Warangal) உட்பட பல நகரங்கள் இந்த முயற்சியில் இணைந்தன.  புதிய பாதை அமைப்பைச் சோதிக்க traffic cone, வண்ணப்பூச்சுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினர்.


Also Read | Danger! வீட்டைச் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களால் ஆபத்து!


அதேசமயம் சண்டிகரில்   வசதியான சிக்னல்கள் நிறுவப்பட்டன. லோதி கார்டன் காலனியில் வாகன போக்குவரத்தை மாற்றியமைப்பதன் மூலம் புது தில்லி குழந்தைகளுக்கான சைக்கிள் பிளாசாவை உருவாக்குகிறது.


நாசிக், பெங்களூரு போன்ற நகரங்கள் வயதான மற்றும் இளைய பெண்களை சைக்கிள் ஓட்ட ஊக்குவித்தன, இதனால் அவர்களுக்கு பயணத்திற்கு எளிதான மற்றும் செலவு குறைந்த வழிமுறையை வழங்கியது. ராஜ்கோட் மற்றும் ஜபல்பூரில், மூத்த அதிகாரிகள் வேலைக்குச் செல்லும் போது மிதிவண்டிகளை பயன்படுத்தினர்.


சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சைக்கிள்களை விநியோகித்தன. தற்போது பல நகரங்கள், குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை அடைய சைக்கிள் ஓட்டும் திட்டங்களை உருவாக்கி வருகின்றன. இவை, நகரங்களை பாதுகாப்பான, கவர்ச்சிகரமான, நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கான வசதியான இடங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன.


Also Read | சூப்பரான வெள்ளரிக்காய்ப் பாயசம் செய்வது எப்படி? இப்படித்தான்…


சர்வதேச நிலையில், பார்சிலோனாவும் லண்டனும் தங்கள் கோவிட் -19 மீட்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சைக்கிள் ஓட்டுதல் உள்கட்டமைப்பை பரிசோதித்து வருகின்றன. இது ஒரு நிலையான மற்றும் சமமான போக்குவரத்து முறையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கார்பன் உமிழ்வைக் குறைப்பதன் மூலம் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கிறது.


2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் சைக்கிள் விற்பனை 20% உயர்ந்துள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்க, அதற்கான உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது என்பது, வழக்கத்தை விட 5.5 மடங்கு சதவிகித பொருளாதார நன்மைகளைக் வழங்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.


குறுகிய தூரங்களுக்கு சைக்கிள் ஓட்டுவதால் இந்திய பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு 1.8 டிரில்லியன் ரூபாய் வரை லாபம் கிடைக்கும், அதே நேரத்தில் மாசுபாடு மற்றும் அதன் விளைவாக ஏற்படும் காலநிலை மாற்றத்தை சமாளிக்க சைக்கிளிங், ஒரு நம்பகமான தீர்வாகவும் இருக்கலாம்.


Also Read | Ayurvedic Agni Tea: அக்னி தேநீர் இருக்கும்போது வேறு டீ எதற்கு?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR