வருமான வரியை தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம்

புதிய இணையதளமான incometax.gov.in ஜூன் 7 ஆம் தேதி தொடங்கப்படும். வரி செலுத்துவோருக்கு இனி வருமான வரி தாக்கல் செய்வது எளிதாக இருக்கும் மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) கூறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 6, 2021, 10:51 AM IST
  • வரி தாக்கலுக்கான புதிய இணையதளம் நாளை அறிமுகம்.
  • புதிய இணையதளத்திற்கான புதிய மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் சிபிடிடி தெரிவித்துள்ளது.
  • வரி செலுத்துவோர் அனைத்து வகையான பிற தகவல்களையும் ஒரே இடத்தில் பெறலாம் என்று சிபிடிடி கூறியது
வருமான வரியை தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம் title=

வருமான வரி தாக்கலை (Income Tax Return) எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் தயாராகி வருகிறது. புதிய இணையதளம்  வரும் ஜூன் மாதம்  7ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் நிலையில், நாளை (ஜூன்1) முதல் ஜூன் 6ம் தேதி வரை பழைய இணைய தளம் இயங்காது என வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

வருமான வரித் துறையில் (Income Tax Department) மின்னணு முறையில் வருமான வரி (IT) கணக்கு தாக்கல் செய்ய தற்போது  www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.

மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) வெளியீட்டின்படி, புதிய இனையதளமான incometax.gov.in (www.incometax.gov.in) ஜூன் 7 ஆம் தேதி தொடங்கப்படும். வரி செலுத்துவோருக்கு இனி வருமான வரி தாக்கல் செய்வது எளிதாக இருக்கும்.

புதிய இனையதளமான incometax.gov.in (www.incometax.gov.in) ஜூன் 7 ஆம் தேதி தொடங்கப்படும். வரி செலுத்துவோருக்கு இனி வருமான வரி தாக்கல் செய்வது எளிதாக இருக்கும் மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) கூறியுள்ளது.

வரி செலுத்துவோர் உடனடி தகவல்களை பெறும் வண்ணம் நிலுவையில் உள்ள நடவடிக்கை உட்பட அனைத்து வகையான பிற தகவல்களையும் ஒரே இடத்தில் பெறலாம் என்று சிபிடிடி மேலும் கூறியது. எனினும், வரி வருவாய் தாக்கல் அம்சம் ஜூன் 18 அன்று தான் செயல்பாட்டிற்கு வரும்.

ALSO READ | மத்திய அரசு, ட்விட்டருக்கு விடுக்கும் இறுதி எச்சரிக்கை; அடுத்தது என்ன..!!

வரி செலுத்துவோர் புதிய இணையதளத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் புதிய மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் சிபிடிடி தெரிவித்துள்ளது. "புதிய இணையதளம் குறித்து புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆகலாம், எனவே புதிய போர்ட்டல் தொடங்கப்பட்ட பின்னர் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக சிறிது பொறுமை காக்க வேண்டும் என அனைத்து வரி செலுத்துவோரிடம் கோரிக்கை வைத்துள்ளது.  

ஐ.டி.ஆர் 1 மற்றும் 4 (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்) மற்றும் ஐ.டி.ஆர் 2 (ஆஃப்லைன்) வரி வருவாய் படிவங்களை பொறுத்தவரை, புதிய போர்டலில்  வருமான வரி தாக்கல் தொடர்பான மென்பொருள் இலவசமாக கிடைக்கும். ஐடிஆர் 3, 5, 6, 7  படிவங்களை பொறுத்தவரை, வரி தாக்கல் தொடர்பான வசதிகள் விரைவில் கிடைக்கும் என சிபிடிடி மேலும் வலியுறுத்தியது.

ALSO READ: SBI Alert: எஸ்பிஐ வங்கியின் பயனுள்ள அறிவிப்பு; வங்கி பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News