தபால் அலுவலக திட்டங்கள்: நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற வகையில், தபால் அலுவலகம் அவ்வப்போது பல வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பெண்கள் முதலீடு செய்வதன் மூலம் வலுவான வருமானத்தைப் பெறக்கூடிய பல சேமிப்புத் திட்டங்களை அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது. இன்று பெண்களுக்கான 5 தபால் அலுவலக திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இதில் பெண்கள் வரி விலக்கின் பலனையும் முதலீட்டில் வலுவான வருமானத்தையும் பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (PPF) 


பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (Public Provident Fund Scheme - PPF) என்பது நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் பெண்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். இந்த திட்டத்தின் கீழ், அரசாங்கம் தற்போது டெபாசிட்டுகளுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதில் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.


செல்வ மகள் சேமிப்பு திட்டம்


சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) என்னும்  செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்பது அஞ்சல் அலுவலக திட்டமாகும். இது குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக பிரதெயாகமாக தொடங்கப்பட்ட திட்டம். இத்திட்டத்தின் கீழ், 10 வயது வரையிலான பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். இந்தக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். தற்போது இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட்களுக்கு 8 சதவீத வட்டியை மத்திய அரசு வழங்குகிறது.


மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்


மகிளா சம்மான் பச்சத் யோஜனா என்பது மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும். இது பெண்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும் இதில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 7.5 சதவீதம் வரை வட்டி பெறலாம். இந்தத் திட்டதில் முதலீடு செய்வதற்கான மொத்தக் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.


மேலும் படிக்க | EPFO Higher Pension: உயர் ஓய்வூதியத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா?


தேசிய சேமிப்புச் சான்றிதழ்  - NSC


தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate - NSC) பெண்களுக்கு சிறந்த முதலீட்டுத் தேர்வாக  இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் ரூ 1000 முதல் எந்தத் அளவிலான தொகையையும் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்த வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 7.7 சதவீதம் என்ற விகிதத்தில் கிடைக்கும். இத்திட்டத்தின் மொத்த காலம் 5 ஆண்டுகள்.


போஸ்ட் ஆபிஸ் டெர்ம் டெபாசிட் திட்டம்


போஸ்ட் ஆபிஸ் டெர்ம் டெபாசிட் திட்டமும் (Post Office Time Deposit Scheme) பெண்களுக்கு ஒரு நல்ல முதலீட்டு விருப்பமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை கணக்கில் டெபாசிட் செய்யலாம். தபால் அலுவலகம் 5 ஆண்டுகளுக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.


மேலும் படிக்க | EPF கணக்கில் புதிய மொபைல் எண்ணை இணைக்க வேண்டுமா? இதோ எளிய ஆன்லைன் செயல்முறை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ