Post Office Saving Schemes: சேமிப்புத் திட்டங்கள் என்று வரும்போது, ​​சிறு சேமிப்புத் திட்டங்கள் அல்லது தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் என்ற பெயர் முதலில் அனைவர் நினைவிலும் வரும். பெரும்பாலான வங்கிகளின் எஃப்டி திட்டங்களை விட இதில் அதிக வருமானம் கிடைக்கும். இந்த சேமிப்புத் திட்டங்கள் அரசின் ஆதரவைப் பெற்றவை. எனவே இவை மிகவும் பாதுகாப்பான முதலீடுகள் . சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு தீர்மானிக்கிறது. இந்நிலையில், வங்கி FD முதலீடுகளை விட அதிக வருமானம் தரும் சிறந்த 5 சிறு சேமிப்பு திட்டங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் முதலீடு செய்யலாம். தற்போது இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இதில் மொத்தத் தொகையாக ரூ.1000 மடங்குகளில் முதலீடு (Investment Tips) செய்ய வேண்டும். இந்த முதலீடு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை இருக்கலாம். வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், முதலீட்டிற்கு வரி விலக்கும் கிடைக்கும். ஓய்வூதியம் இல்லாத நிலையில், வழக்கமான வருமான தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள், இந்தத் திட்டத்தில், முதலீடு செய்யலாம்.


கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra)


கிஸான் விகாஸ் பத்திரம் என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் சேமிப்புச் சான்றிதழ். இதில் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இதில் வரிவிலக்கு எதுவும் கிடைக்காது என்றாலும், ​​கிசான் விகாஸ் பத்திரத்திற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் என்ற அளவில் கூட்டு வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில், முதலீட்டாளர்களின் பணம் 115 மாதங்களில் அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களில் இரட்டிப்பாகும். இங்கு முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS)


தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் (Post Office Monthly Income Scheme), முதலீட்டாளர்கள் நிலையான வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1500 முதல் அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் கூட்டுக் கணக்கில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ரூ.15 லட்சம் என்ற அளவில் உள்ளது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. வட்டி மாதந்தோறும் கிடைக்கும். இதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. தவிர, இது பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கின் பலனும் கிடைக்காது.


மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு அதிக வட்டியை அள்ளித் தரும் சில வங்கிகள்..!!


தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificates)


தேசிய சேமிப்புச் சான்றிதழ் ஒரு உத்தரவாத வருமானம் தரும் முதலீடு மற்றும் சேமிப்புத் திட்டம். இதில் கூட்டு வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. வட்டி முதிர்ச்சியின் போது அசலுடன் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். முதலீட்டுக்கு வரி விலக்கு பலன் கிடைக்கும்.


மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்


இந்தியப் பெண்களிடையே சேமிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக இந்தத் திட்டம் (Mahila Samman Savings Certificate) இந்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் வரிச் சலுகை கிடையாது. வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டது. முதலீட்டாளரின் வருமான வரி அடுக்கின் படி வரி கழிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 


மேலும் படிக்க | லட்சங்களில் வட்டி வருமானம் கொடுக்கும்... அஞ்சலக FD சேமிப்பு திட்டம்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ