அக்டோபர் 2023 முதல் ஏற்பட உள்ள விதி மாற்றங்கள்: செப்டம்பர் மாதம் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில் நிதி தொடர்பான பல விதிகள் அடுத்த மாதம் அதாவது அக்டோபரில் இருந்து மாறப் போகிறது (அக்டோபர் 2023 முதல் விதிகள் மாற்றங்கள்). இவை நேரடியாக சாமானியர்களின் பாக்கெட்டிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விதிகளை நீங்கள் அறிந்திருப்பது முக்கியம்.இல்லை என்றால், நீங்கள் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கலாம். அக்டோபர் 1-ம் தேதி முதல் நடக்கவிருக்கும் இந்த மாற்றங்கள் குறித்த தகவல்களை இன்று அறிந்து கொள்ளலாம். அதனால் நீங்கள் எந்த வருங்காலத்தில் பிரச்சனையும் சந்திக்காமல் இருக்க உதவியாக இருக்கும். அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து என்னென்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன என்பதைச் பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடனடியாக ரூபாய் நோட்டை மாற்றவும்


உங்களிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இருந்தால் உடனே இந்த வேலையை செய்யுங்கள். செப்டம்பர் 2023க்குள் ரூ.2000 நோட்டை மாற்ற ரிசர்வ் வங்கி காலக்கெடுவை வழங்கியுள்ளது. அதன் பிறகு இந்த நோட்டுகள் செல்லாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கண்டிப்பாக உங்களிடன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இருந்தால், கால தாழ்த்தாமல் இன்றே மாற்றுங்கள்.  


வெளிநாட்டு டூர் பேக்கேஜ்


அதே போன்று அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு டூர் பேக்கேஜ் எடுக்க திட்டமிட்டால், ரூ.7 லட்சத்துக்கும் குறைவான டூர் பேக்கேஜ் வாங்கினால் 5% டிசிஎஸ் செலுத்த வேண்டும். 7 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள டூர் பேக்கேஜ்களுக்கு 20 சதவீதம் டிசிஎஸ் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், மருத்துவம் அல்லது கல்வி நோக்கங்களுக்காக, வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போது செய்யப்படும் செலவுகளுக்கு, டிசிஎஸ் 5 சதவிகிதம் என்ற அளவில் வரி விதிக்கப்படும். வெளிநாட்டுக் கல்விக்காகக் கடன் பெறுபவர்களுக்கு, ரூ. 7-லட்சம் வரம்புக்கு மேல் 0.5 சதவீத குறைந்த டிசிஎஸ் விகிதம் விதிக்கப்படும்.


நாமினி கொடுக்கவில்லை என்றால் கணக்கு முடக்கப்படும்


டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளில் SEBI நாமினி பெயர் கொடுக்கப்படுவதை கட்டாயமாக்கியுள்ளது. அதன் காலக்கெடு 30 செப்டம்பர் 2023 அன்று முடிவடைகிறது. இந்தத் தேதிக்குள் கணக்கு வைத்திருப்பவர் நாமினி பெயரை குறிப்பிடவில்லை என்றால், அக்டோபர் 1 முதல் கணக்கு முடக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் டிமேட் மற்றும் வர்த்தகத்தை இயக்க முடியாது. முன்னதாக, டிமேட் மற்றும் வர்த்தக கணக்குகளுக்கு நாமினி பெயர் கொடுப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 என செபி (SEBI) நிர்ணயித்தது, பின்னர் அது ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.


மேலும் படிக்க |  செப்டம்பர் 30-க்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைத்துவிடுங்கள்!


சிறு சேமிப்புக் கணக்கில் ஆதார் இணைப்பது கட்டாயம்


தற்போது சிறுசேமிப்பு திட்டங்களில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. PPF, SSY, Post Office Scheme போன்றவற்றில் ஆதார் தகவலை உள்ளிடுவது அவசியம். நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால், உடனடியாக வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் சென்று இந்த தகவலை உள்ளிடவும். இதைச் செய்யாவிட்டால், அக்டோபர் 1, 2023 முதல் இந்தக் கணக்குகள் முடக்கப்படும்.


பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 


பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் கல்வி நிறுவனத்தில் சேர்க்கை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஆதார் எண், திருமண பதிவு அல்லது அரசுப் பணி நியமனம் ஆகியவற்றிற்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.  இந்த புதிய நடைமுறை, அக்டோபர் 1 முதல் அரசு வேலை அமலுக்கு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கூறி வந்த நிலையில், அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: 3 மடங்கு ஊதிய உயர்வு... டிஏ ஹைக்குடன் இதுவும் உயரும், கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ