2000 ரூபாய் நோட்டு இன்னும் அச்சிடப்படுகிறதா.. மத்திய அரசு கூறியது என்ன..!!!
நாட்டில் 2000 ரூபாய் நோட்டு புழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில், 2000 நோட்டு இன்னும் அச்சிடப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய அரசு மக்களவையில் பதில் அளித்துள்ளது.
நாட்டில் 2000 ரூபாய் நோட்டு புழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில், 2000 நோட்டு இன்னும் அச்சிடப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய அரசு மக்களவையில் பதில் அளித்துள்ளது.
2016-ம் ஆண்டு பிரதமர் மோடி எடுத்த பணமதிப்பிழக்க நடவடிக்கையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாதம், கள்ள நோட்டு, கறுப்புப் பணம் ஆகியவற்றை ஒழிக்க ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இதைத் தொடர்ந்து ரூ.2000 நோட்டு, வெளியிடப்பட்டது. அதோடு புதிய ரூ.500 நோட்டு, ரூ.200 ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டது. இதில் 2000 ரூபாய் நோட்டு மட்டும் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது. ஆனால், மீண்டும் அச்சடிக்கப்படுகிறதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில், இது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.
ALSO READ | NOTA-விற்கு அதிக வாக்குகள் கிடைத்தால்... மத்திய அரசிடம் பதிலை கோரியது SC..!!!
அதில், ''2018-ம் ஆண்டு, மார்ச் 30-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் ரூ.2 ஆயிரம் கரன்சி நோட்டுகள் 336.2 கோடி இருந்தன. 2021, பிப்ரவரி 26-ம் தேதி நிலவரப்படி, 249.9 கோடி எண்ணிக்கையிலான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன” எனக் கூறியுள்ளார்
ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது குறித்து ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை செய்து அரசு முடிவு எடுக்கும். 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் அச்சகம் சார்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவில்லை என்ற தகவலை அவர் அளித்துள்ளார்.
கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் 354.39 கோடி அளவில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதாக 2019 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், 2017-18ஆம் ஆண்டில் 11.15 கோடி அளவில் தான் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.
2018-19ஆம் ஆண்டில் அந்த அளவு மேலும் குறைந்து, 4.66 கோடி என்ற அளவில் தான் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. 2019 ஏப்ரல் மாதத்தில் இருந்து,அதாவது சுமார் 2 ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை" என மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
ALSO READ | Batla House encounter: ஆரிஸ் கானிற்கு மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR