Diwali Bonus: தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில், மத்திய அரசும் பல மாநில அரசுகளும் தங்கள் அரசு ஊழியர்கள் உட்பட, பல பிரிவு மக்களுக்கு தீபாவளி போனஸ் பற்றிய அறிவுப்பை வெளியிட்டு வருகின்றன. இது தவிர தனியார் நிறுவனங்களும் தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Ladki Bahin Yojana 


இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு பெண்களுக்கான ‘லட்கி பஹின் யோஜனா’ திட்டத்தின் கீழ் தீபாவளி போனஸை அறிவித்துள்ளது. லட்கி பஹின் யோஜனா தீபாவளி போனஸ் 2024 திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்குகளில் அக்டோபர் மாதம் ரூ.1500 -க்கு பதிலாக ரூ.3000 அதிகாரிகளால் வரவு வைக்கப்படும். தகுதியுள்ள அனைத்துப் பெண்களும் நான்காவது மற்றும் ஐந்தாவது தவணைக்கான பணத்தை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் பெறுவார்கள்.


மாநிலம் முழுவதும் உள்ள பெண்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க மகாராஷ்டிரா மாநில அரசு முதலமைச்சர் மாஜி லட்கி பஹின் யோஜனாவை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு முயற்சியானது பெண்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை வழங்கி, அதன் மூலம் அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதையும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


லட்கி பஹின் யோஜனா: இதில் சேர தேவையான தகுதி என்ன?


- மகாராஷ்டிராவில் வசிக்கும் பெண்கள் இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 
- மாதாந்திர உதவிக்கு தகுதி பெற, இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்களின் குடும்பத்துடைய மொத்த ஆண்டு வருமானம் ரூ. 2,50,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- அவர்களது வங்கிக் கணக்குகள் அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- இந்தத் திட்டத்தில் திருமணமான, விதவை, விவாகரத்து பெற்ற, கைவிடப்பட்ட அல்லது ஆதரவற்ற பெண்கள் சேரலாம்.
- குடும்பத்தில் ஒரு திருமணமாகாத பெண்ணும் இதற்கு தகுதியுடையவர் ஆகிறார்.
- இதில் சேரும் பெண்களின் வயது 21 முதல் 65 -க்குள் இருக்க வேண்டும்.


லட்கி பஹின் யோஜனா: இந்த திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள் என்ன?


இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பல அத்தியாவசிய ஆவணங்களை வழங்க வேண்டும். ஆதார் அட்டை, அடையாள அட்டை அல்லது சான்றிதழ், வங்கிக் கணக்கு விவரங்கள், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வயதுச் சான்று மற்றும் ரேஷன் கார்டு ஆகியவை இந்த அத்தியாவசிய ஆவணங்களில் அடங்கும். கூடுதலாக, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமானச் சான்று (மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்தத் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது), இருப்பிடச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவையும் இதற்கு விண்ணப்பிக்க அவசியம்.


மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு முக்கிய செய்தி: நிறுவனங்களுக்கு EPFO புதிய விதிகள் அறிமுகம்


லட்கி பெஹன் யோஜனா: இந்த திட்டத்திற்கு விண்ணப்பிபதற்கான கடைசி தேதி


மகாராஷ்டிரா அரசு லட்கி பஹின் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை அக்டோபர் 15 வரை, அதாவது இன்றுவரை நீட்டித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காத பெண்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இந்த நீட்டிப்பு அனுமதிக்கிறது.


லட்கி பஹின் யோஜனா: இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?


- மாஜி லட்கி பஹின் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை நீங்கள் பூர்த்தி செய்தால் முதலில் அதன் அதிகாரப்பூர்வ போர்டலுக்கு செல்லவும். 


- முகப்புப் பக்கத்தில், "விண்ணப்பதாரர் லாக்-இன்” விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.


- ஒரு புதிய பக்கம் தோன்றும். "Create an Account" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


-  உங்கள் பெயர், கடவுச்சொல் மற்றும் முகவரி உட்பட தேவையான அனைத்து விவரங்களையும் வழங்கி பதிவு படிவத்தை நிரப்பவும்.


- படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, அனைத்து தகவல்களையும் கவனமாக மதிப்பாய்வு செய்து, பதிவு செயல்முறையை முடிக்க "சைன் அப்” என்பதைக் கிளிக் செய்யவும்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 குட் நியூஸ்: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர், தீபாவளி போனஸ்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ