ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகப்பெரிய செய்தி: தீபாவளி பரிசாய் வந்த அரசின் அறிவிப்பு
Ration Card Holders: ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிக நல்ல செய்தி. இந்தியா முழுவதும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசும் பல மாநில அரசுகளும் பல வித சலுகைகளை அறிவித்து வருகின்றன.
ரேஷன் கார்டு தீபாவளி பரிசு: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்தியா முழுவதும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசும் பல மாநில அரசுகளும் பல வித சலுகைகளை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் மத்திய அரசு இலவச ரேஷன் திட்டத்தை டிசம்பர் வரை நீட்டித்தது. இதைத் தொடர்ந்து, மாநில அரசுகளும் அட்டைதாரர்களுக்கு பண்டிகை காலத்தை ஒட்டி பல வித அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் உத்தர பிரதேச யோகி அரசாங்கம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசை வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு இனிப்புகள் தயாரிக்க அரசு சலுகை விலையில் சர்க்கரை வழங்க உள்ளது. உ.பி.யில் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் விநியோகம் அக்டோபர் 20, அதாவது இன்று முதல் இலவசமாக தொடங்குகிறது. இம்முறையும் பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்கப்படும்.
ரேஷன் விநியோகம் அக்டோபர் 20 முதல் 31 வரை நடைபெறும்
உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, ரேஷன் விநியோக நேரம் சீரில்லாமல் போனது. ஆகஸ்ட் மாதத்துக்கான ரேஷன், அக்டோபர் மாதத்தில் அரசால் வழங்கப்படும். மாநில அரசு சார்பில் ஆகஸ்ட் மாதத்துக்கான ரேஷன் விநியோகப் பணிகளை அக்டோபர் 20-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் கார்டுதாரர்களுக்கு சலுகை விலையில் சர்க்கரையும் விநியோகிக்கப்படும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு
மாநிலத்தில் மொத்தம் 3.6 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்
ரேஷன் விநியோகத்தின் போது, ஒரு யூனிட்டில் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை அரசு தரப்பில் இருந்து அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு மூன்று கிலோ சர்க்கரையும் வழங்கப்படும். சர்க்கரை கிலோ 18 ரூபாய்க்கு கிடைக்கும். உத்தரபிரதேசத்தில் அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 41 லட்சமாகும். இது தவிர, தகுதியான வீட்டு ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை 3.18 கோடி ஆகும்.
உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மாநிலத்தின் அனைத்து ரேஷன் கடைக்காரர்கள் சார்பில் அக்டோபர் 20-ம் தேதி முதல் ரேஷன் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விநியோகம் அக்டோபர் 31 வரை தொடரும். இந்த விநியோகத்தில் பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்கப்படும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ