பண்டிகை கால சிறப்பு அறிவிப்பாக 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கான வட்டியின் மீதான வட்டியை தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட்டி தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தும் அரசின் இந்த முடிவின் பின்னணியில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டு சேவைகள் வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. மத்திய நிதி சேவைகள் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் இந்த தீபாவளி சலுகையால், அரசின் கருவூலத்திற்கு 6,500 கோடி ரூபாய் வருவாய் குறையும்.  


கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கியின் moratorium scheme என்ற திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கான வட்டி தள்ளுபடியை "விரைவில்" அமல்படுத்துமாறு அக்டோபர் 14 ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சாமானியர்கள் தீபாவளி கொண்டாடுவது அரசாங்கத்தின் கைகளில் தான் உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.


வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த திட்டத்தினால் பயனடைவது யார்?
2020ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை கடன் பெற்றவர்களுக்கு இந்த வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை கிடைக்கும். 
வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களின்படி, பிப்ரவரி 29 ஆம் தேதியன்று சரிவர கணக்குகளை பராமரித்தவர்களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும்.    அதாவது வாராக்கடன் (NPA) என்று வகைப்படுத்தலுக்குள் அடங்காதவர்களுக்கு இந்த வட்டிச் சலுகை கிடைக்கும்.  
வீட்டுக் கடன், கல்வி கடன்கள், கிரெடிட் கார்டு நிலுவைகள், வாகன கடன்கள், எம்.எஸ்.எம்.இ (MSME) கடன்கள், நுகர்வோர் கடன்கள் (consumer durable loans) மற்றும் நுகர்வு கடன்கள் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் சலுகை பெற தகுதி பெற்றவை.
இத்திட்டத்தின்படி, 2020, மார்ச் 27 அன்று.
ரிசர்வ் வங்கி அறிவித்த கடனைக் காலம் தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட உரிமையை (moratorium on repayment of loan) கடன் பெற்றவர் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ தடையை பெற்றாரா என்பதைப் பொருட்படுத்தாமல், அந்தக் காலகட்டத்தில் கூட்டு வட்டி மற்றும் எளிய வட்டிக்கு இடையிலான வேறுபாட்டை கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு திரும்பச் செலுத்த வேண்டும்.  
கடனைக் காலம் தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட உரிமையை (moratorium on repayment of loan) பயன்படுத்தாத கடன் பெற்றவ்ர்களுக்கும் இந்த சலுகைத் திட்டம் பொருந்தும்.
இந்த தொகையை வாடிக்கையாளர்களுக்கு வரவு வைத்த பிறகு, கடன் வழங்கும் நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து இந்தத் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளும்.


Read Also | இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை நிறுத்தும் ICICI Bank! காரணம் என்ன?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR