இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை நிறுத்தும் ICICI Bank! காரணம் என்ன?

இலங்கையில் தனது வணிக நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அறிவித்துள்ளது.  இது தொடர்பான ICICI வங்கியின் கோரிக்கையை பரிசீலித்த இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம் (The Monetary Board of the Central Bank of Sri Lanka), வணிக நடவடிக்கைகளை தங்கள் நாட்டில் நிறுத்திக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 25, 2020, 06:07 PM IST
இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை நிறுத்தும் ICICI Bank! காரணம் என்ன?

புதுடெல்லி: இலங்கை நாணய ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பின்னர் இலங்கையில் அக்டோபர் 25ஆம் தேதியன்று தனது வங்கியின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் கோரிக்கையை பரிசீலித்து, இலங்கையில் வங்கியின் வணிக நடவடிக்கைகளை மூடுவதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக வங்கி தெரிவித்துள்ளது. அதோடு, இலங்கையில் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதற்கும் இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம் (The Monetary Board of the Central Bank of Sri Lanka) ஒப்புதல் அளித்துள்ளது என்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வங்கி மேற்பார்வை இயக்குநர் நாணய வாரியம் விதித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தையும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சரிவர நிறைவேற்றியுள்ளதாக அந்த வாரியம் திருப்தி அடைந்துள்ளது. இலங்கையில் வங்கியின் சேவைகளையும், வணிகத்தையும் செயல்படுத்த வங்கிக்கு வழங்கப்பட்ட உரிமம் 2020 அக்டோபர் 23 முதல் ரத்து செய்யப்படுகிறது" என்று மிகப் பெரிய தனியார் வங்கியான ICICI  தெரிவித்துள்ளது.  

ஐசிஐசிஐ வங்கி, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகும். இது மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.

Also Read | SBI ATM-ல் பணம் எடுக்கும் விதியில் மாற்றம்! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News