கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!
Credit card mistakes: ஆன்லைன் ஷாப்பிங், EMI அல்லது ஏதேனும் பொருட்கள் வாங்க கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது சில தவறுகளை செய்யாமல் இருப்பது நல்லது.
Credit card mistakes: தற்போது வேலைக்கு செல்லவும் பெரும்பாலானோரிடம் கிரெடிட் கார்டு உள்ளது. பலரும் பொருட்களை வாங்க கிரெடிட் கார்டை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலோனோர் தங்களது சேமிப்பில் இருந்து செலவு செய்யாமல் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்கின்றனர். மேலும் இதில் பல சலுகைகளும் கிடைப்பதால் இதனை கொண்டு ஷாப்பிங் செய்கிறார்கள். மேலும் கிரெடிட் கார்ட் மூலம் EMI வசதியும் எளிதில் கிடைக்கிறது. குறிப்பாக ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மொபைல் போன்ற வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கிரெடிட் கார்டு மூலம் வாங்கி கொள்ளலாம். ஆனால் கிரெடிட் கார்டை ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் மோசடியில் சிக்க வாய்ப்புள்ளது.
கிரெடிட் கார்ட் டோக்கனைசேஷன்: இணையதளங்கள் மூலம் பொருட்களை வாங்க கிரெடிட் கார்டைப் நீங்கள் பயன்படுத்தினால், இந்த பரிவர்த்தனைக்கு எப்போதும் கார்டு டோக்கனைசேஷனைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆப்ஷனை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும். மேலும் இதனை தவறான வழிகளில் பயன்படுத்த முடியாது.
ஆன்லைன் தளங்களில் பகிர வேண்டாம்: கிரெடிட் கார்டு விவரங்களை அதாவது கிரெடிட் கார்டு எண், காலாவதி தேதி, CVV எண் அல்லது கிரெடிட் கார்டு அறிக்கை போன்றவற்றை முக்கியமான தகவல்களை ஆன்லைன் தளங்களில் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் கிரெடிட் கார்டு தொடர்பான தரவுகள் கசிய வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. எனவே, இதுபோன்ற முக்கிய தகவல்களை கொடுக்க வேண்டாம்.
கிரெடிட் கார்டு விவரங்களை சேமிக்க வேண்டாம்: தற்போது பெரும்பாலான மக்கள் ஷாப்பிங் செய்ய சில குறிப்பிட்ட இணையதளம் அல்லது ஆப்ஸைப் பயன்படுத்துகின்றனர். ஷாப்பிங் செய்யும்போது ஒவ்வொரு முறையும் கார்டு விவரங்களை உள்ளிடுவதற்கு சோம்பேறித்தனம்பட்டு, இதனை எளிதாக்குவதற்காக கிரெடிட் கார்டு விவரங்களை குறிப்பிட்ட இணையதளம் அல்லது ஆப்ஸில் சேமித்து வைக்கின்றனர். இது பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், உண்மையில் ஆபத்தானது. எனவே இது போன்ற ஆப்ஸ்களில் விவரங்களை சேமிப்பது நல்லது இல்லை.
இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்: மெசேஜ், வாட்ஸ்அப், சோஷியல் மீடியா ஆப்ஸ் அல்லது மெயில் என எந்த வழியாகவும் வரும் தெரியாத லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அத்தகைய லிங்கை நீங்கள் கிளிக் செய்தால் உங்கள் மொபைல், மடிக்கணினி அல்லது கணினி ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற தவறுகளை செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ