PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

EPFO Pension Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்கிறது.  உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் செல்கிறது.   

Written by - RK Spark | Last Updated : Apr 24, 2024, 06:27 AM IST
  • அடிப்படை சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்படுகிறது.
  • முதலாளியின் பங்கும் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படும்.
  • ஓய்வு பெற்ற பிறகு மொத்த பணத்தையும் பெற்று கொள்ளலாம்.
PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? title=

EPFO Pension Rules: இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளர்களிடம் இருந்தும் மாதம் மாதம் பிஎஃப் பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்களின் ஒரு பங்கும், முதலாளியின் ஒரு பங்கும் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மேலும் இந்த தொகைக்கு அரசு நல்ல வட்டியும் தருகிறது. தற்போது பிஎஃப்க்கு 8.25 சதவீதம் வட்டியை மத்திய அரசு வழங்கப்படுகிறது. ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது, ​​இந்தத் தொகை மொத்தமாக கொடுக்கப்படுகிறது. அவசர தேவைகளுக்கு மட்டும் முன்கூட்டியே எடுத்து கொள்ளவும் அனுமதி உள்ளது. இந்த பணத்தில் இருந்து சில பகுதிகள் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய கணக்கிற்கும் செல்கிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான epfindia.gov.inல் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

பிஎப் கணக்கு

பிஎப் கணக்கு என்பது ஒரு சேமிப்பு திட்டம். ஒரு நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும். மத்திய அரசின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. ஒன்று EPF அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இரண்டாவது EPS அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டம். ஒரு ஊழியர் ஓய்வூதியம் பெற, அவரது பிஎஃப் கணக்கு குறைந்தது 10 ஆண்டுகள் செயலில் இருக்க வேண்டும். அதாவது ஒரு ஊழியரின் 10 வருட ஓய்வூதிய பங்களிப்பு EPFO ​ல் டெபாசிட் செய்யப்பட வேண்டும். ஊழியரின் ஓய்வூதியப் பங்களிப்பு 9 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் வரை டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், அது 10 ஆண்டுகள் ஆக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அந்த நிறுவனம் அடிப்படை சம்பளத்தில் 8.33% EPS மற்றும் 3.67% அடிப்படை சம்பளத்தை EPFல் டெபாசிட் செய்கிறது. அதன் முதிர்வு காலம் பணியாளரின் 58 வயது வரை மட்டுமே ஆகும். பிஎப் கணக்கு வைத்திருப்பவர் ஒருவேளை இறந்துவிட்டால், அவரது நாமினிக்கு மொத்த ஓய்வூதியத் தொகையும் கிடைக்கும். நாமினி இல்லாத பட்சத்தில் அவரது மனைவி அல்லது குழந்தைகளுக்கு 25 வயது வரை ஓய்வூதியம் கிடைக்கும். அதேசமயம் திருமணம் ஆகவில்லை என்றால் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும். எனவே, பிஎஃப் கணக்கில் நாமினியின் பெயரைச் சேர்ப்பது முக்கியம். நாமினி இல்லை என்றால், ஊழியரின் பெற்றோருக்கு இந்த ஓய்வூதிய பணம் கிடைக்கும்.

ஓய்விற்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்?

epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, உங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும். பிறகு, பணியில் சேர்வது, வெளியேறுவது உள்ளிட்ட சில தகவல்களை கொடுக்க வேண்டும். இப்போது 58 ஆண்டுகள் நிறைவடைந்த தேதி, ஆரம்பகால ஓய்வூதியத்திற்கான கணக்கிடப்பட்ட ஓய்வூதியம் தொடங்கும் தேதி காண்பிக்கபடும். நீங்கள் விரும்பினால், 50 வயது முடிந்த பிறகும் ஓய்வூதியத்தைப் பெற முடியும். அத்தகைய சூழ்நிலையில் ஓய்வூதியத் தொகை குறைக்கப்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இப்போது ஓய்வூதிய கால்குலேட்டரில் ஓய்வூதியம் தொடங்கும் தேதி மற்றும் ஓய்வூதிய சம்பளத்தை உள்ளிட்டு, விவரங்களைக் பார்க்கலாம். இதற்குப் பிறகு, நீங்கள் ஒவ்வொரு மாதமும் பெறும் ஓய்வூதியத்தின் மதிப்பை காண்பீர்கள்.

மேலும் படிக்க | Health Insurance: உடல் நல காப்பீடு பெற இனி வயது வரம்பு இல்லை.... IRDAI அதிரடி முடிவு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News