ஏப்ரல் 1-க்கு முன்பாக செய்ய வேண்டிய முக்கிய பணிகள்.. இல்லையென்றால் இழப்பு நேரிடும்
புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளது. அதற்குள் நீங்கள் சில முக்கியமான வேலைகளைச் செய்ய வேண்டும், இல்லையெனில் உங்களுக்கு இழப்பு ஏற்படலாம்.
புதுடில்லி: புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளது.அதற்குள் நீங்கள் சில முக்கியமான வேலைகளைச் செய்ய வேண்டும், இல்லையெனில் உங்களுக்கு இழப்பு ஏற்படலாம்.வருமான வரியில் விலக்கு பெற, முதலீடு மற்றும் ஆதார் ஆகியவற்றை பான் உடன் இணைப்பது போன்ற பல முக்கியமான விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும். வீடு வாங்க மலிவான வீட்டுக் கடனை சலுகையையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வருமான வரி விலக்கிற்கான முதலீடு
வரி விலக்கு சலௌகையை பயன்படுத்தி கொள்ள நடப்பு நிதியாண்டில் முதலீடு செய்ய விரும்பினால், அதை மார்ச் 31 க்குள்செய்ய வேண்டும். 80 சி மற்றும் 80 டி போன்ற வருமான வரிச் சட்டத்தின் பல பிரிவுகளில், முதலீடுகளுக்கு வரிச்சலுகையின் பலனைப் பெறலாம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி இன் கீழ், ரூ .1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வரி விலக்கு பெற முடியும்.
ஆதார்-பான் இணைப்பு (Aadhaar-PAN LInk)
பான் கார்டை ஆதார் உடன் இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். மார்ச் 31 க்குள் உங்கள் பான் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால், அது செல்லாது. அவ்வாறு நடந்த பான் அட்டை (PAN Card) செல்லாத பான் அட்டையாக ஆவதை தடுக்க, மார்ச் 31 க்குள் அதை இணைக்கவும்.
ALSO READ | Digital India: DigiLocker Platform சேவையில் பாஸ்போர்ட் பெறுவது இனி மிக மிக எளிது...!!
மலிவான வீட்டுக் கடன் சலுகை
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), HDFC, கோட்டக் மஹிந்திரா மற்றும் ICICI வங்கி ஆகியவை வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை பெற விரும்பினால், நீங்கள் 31 மார்ச் 2021 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ், SBI, HDFC மற்றும் ICICI வங்கிகள் 6.70% வட்டிக்கு கடன்களை வழங்குகின்றன. கோடக் மஹிந்திரா வங்கி 6.65% வட்டிக்கு வீட்டுக் கடனை வழங்கி வருகிறது.
பிரதமர் கிசான் சம்மான் நிதியில் பதிவு செய்தல்
பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், இதுவரை 7 தவணைகள் விவசாயிகள் கணக்கில் அனுப்பப்பட்டுள்ளன. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்யாதவர்கள், மார்ச் 31 க்கு முன் விண்ணப்பித்து அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஹோலிக்குப் பிறகு அவர்களுக்கு ரூ .2000 கிடைக்கும், இந்த திட்டத்தின் கீழ், அரசாங்கம் ஆண்டுதோறும் 6000 ரூபாயை 3 தவணைகளில் தலா இரண்டாயிரம் ரூபாயாக செலுத்துகிறது.
கிசான் கிரெடிட் கார்டைப் பெறுவதற்கான வாய்ப்பு
விவசாயிகள், கிசான் கிரெடிட் கார்டு (KCC) செய்யப்படவில்லை என்றால், மார்ச் 31 வரை அதனை பெற்றுக் கொள்ளலாம். இதுவரை கே.சி.சி பெறாத விவசாயிகள் தங்களது அருகிலுள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ளலாம். இதற்காக, கே.சி.சி.பெறு செயல்முறையை அரசாங்கம் எளிதாக்கியுள்ளது. இப்போது விவசாயிகள் மிகவும் எளிய முறையில் படிவத்தை நிரப்பலாம். 15 நாட்களுக்குள் அவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு கிடைக்கும்.
ALSO READ | அலுவலகத்தில் பாஸ் உடன் மோதலா... இதோ உங்களுக்காக 4 முக்கிய டிப்ஸ்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR