அலுவலத்தில் பணி புரியும் அனைவருக்கும் பாஸ் உடன் சண்டை வருவது சகஜம் தான். அதனால், நமது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு, மன அழுத்தமும் ஏற்படலாம்
தனியார் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு, அரசு பணியில் இருப்பவர்களை விட வேலை பளு, அதிகம் இருக்கும், அவர்களிடம் அதிக அளவில் எதிர்பார்ப்பும் இருக்கும்.
தனியார் துறையில் ஊழியர்கள் தங்களை சிறப்பாக நிரூபிக்க கடுமையாக உழைக்க வேண்டும். இந்த மன அழுத்தத்தின் மத்தியில், பாஸ் உடன், அதாவது உங்கள் மேலாளர் அல்லதுஉயர் அதிகாரியுடன் மோதல் ஏற்படுவது சகஜம் தான். உங்கள் மனதை நிலையாக வைத்திருந்து வேலையில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட முடியும்.
கீழே குறிப்பிட்டவற்றை தவறாமல் பின்பற்றினால் கூலாக வேலை செய்யலாம்.
ALSO READ | Digital India: DigiLocker Platform சேவையில் பாஸ்போர்ட் பெறுவது இனி மிக மிக எளிது...!!
ஆழ்ந்த சுவாசம்- ஆழமான சுவாசம் உடலில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது. இதனால் மனம் அமைதியாகும்.. உங்கள் மனம் அமைதியானால், உடலில் நல்ல ஹார்மோன்கள் சுரக்கும். அதனால் நாம் பிரச்சனையை ஆக்கப் பூர்வமாக அணுக முடியும்.
இசை - மனநிலை சரியில்லாமல் இருக்கும்போது மனத்திற்கு இதம் தரும் பாடலையும், நேர்மறை சிந்தனையை தூண்டும் பாடல்களையும் நீங்கள் கேட்கலாம். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் எண்டோர்பின்ஸ் என்ற ஹார்மோன் சுரக்கும். இதனால், உங்கள் மனம்சோரடையாமல் உற்சாகத்துடன் இருக்கும்.
புதிய காற்று - அலுவலகத்தில் சிலருடன் மோதல் போக்கு இருந்தால், சிறிது ப்ரேக் எடுத்துக் கொண்டு மனநிலையை சரிசெய்ய வெளியில் சென்று புதிய காற்றை சுவாசியுங்கள். அதனால் நாம் பிரச்சனையை ஆக்கப் பூர்வமாக அணுக முடியும். உங்கள் மனம்சோரடையாமல் உற்சாகத்துடன் இருக்கும்.
புன்னகை- மனநிலை சரியில்லை என்றால்,புன்னகைப்பதும், சிரிப்பதும் கடினம். ஆனால் நீங்கள் சிரித்தால் அது ஒரு டானிக் போல வேலை செய்யும்.
ALSO READ | காலாவதியாகிவிட்ட பாலிஸியை புதுப்பிக்க LIC கொண்டு வந்துள்ள சிறப்பு திட்டம்..!!
தேசம், சர்வ்தேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR