Business Idea Tips In Tamil : இந்தியாவை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக சுய தொழில் செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். காரணம், பலருக்கு ஒருவருக்கு கீழ் வேலை செய்வது பிடிப்பதில்லை. மாத சம்பளத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது கடுப்பாவதால், பலர் சுய தொழில் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதிலும், சீசனுக்கு சீசன் வெவ்வேறு தொழிலையும் பலர் செய்து வருகின்றனர். குறிப்பாக, சம்மர் சீசன் வந்து விட்டாலே ஐஸ் கிரீம், ஜூஸ் தாெழில்கள் சூடு பிடிக்க ஆரம்பித்து விடும். அப்படிப்பட்ட தொழில்களில் ஒன்றை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தர்பூசணி சாகுபடி:


முதலாளிகளுக்கு நல்ல வருமானத்தை தரும் தொழில்களில் ஒன்று, தர்பூசணி சாகுபடி. ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் எனும் இடத்தில் தர்பூசணி சாகுபடி செய்து பல மடங்கு வருமானத்தை பார்த்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பெண்கள், 200 ஏக்கர் நிலத்தில் தர்பூசணியை பயிரிட்டு பல லட்சங்களில் லாபத்தை பார்த்து வருகின்றனர். இவர்கள், ஒரே குழுவாக இணைந்து இந்த விவசாய சாகுபடியை பார்த்து வருகின்றனர். 


தர்பூசணி சாகுபடிக்கு என்ன செய்ய வேண்டும்?


தர்பூசணியை சாகுபடி செய்வதற்கு ஈரப்பதம் உள்ள நிலம் அவசியம். இந்த தாவரங்கள், 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்றாக வளர்கின்றனர். களிமண், தர்பூசணி வளர்வதற்கு ஏதுவானதாக கருதப்படுகிறது. தர்பூசணி சாகுபடி செய்யப்படும் மண்ணின் pH அளவு, 6.5 முதல் 7.0 வரை இருக்க கூடாது என வியாபாரம் செய்பவர்கள் கூறுகின்றனர். வட இந்தியாவை பொருத்தவரை, தர்பூசணியை பிப்ரவரியில் இருந்து மார்ச் மாதம் வரை விதைக்கின்றனர். 


மேலும் படிக்க | மத்திய அரசி ஊழியர்களுக்கு ஹோலியில் ஜாலி: இந்த தேதியில் டிஏ ஹைக் அறிவிப்பு


அறுவடை எப்போது?


தர்பூசணி பழ செடிகளை, விதைத்த 2 முதல் 3 மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்து கொள்ளலாம். இந்த பழங்களில் அளவும் வகையும் அந்தந்த மண் வகையை சார்ந்து அமையும். நீங்கள் விதைக்கும் பழங்கள், வெகு தூரத்திற்கு ஏற்மதி செய்யப்படுபவையாக இருந்தால் அவை பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்பட வேண்டும். அருகாமையில் இருக்கும் இடத்தில் வேலை செய்வதாக இருந்தால், பழுத்த பிறகு அறுவடை செய்து கொள்ளலாம். தர்பூசணியை அறுவடை செய்த பிறகு அதை குளிர்ச்சியான இடத்தில் பதப்படுத்த வேண்டும். 


எவ்வளவு லாபம் வரும்:


தர்பூசணியை ஒரு ஹெக்டர் நிலத்தில் 200 குவிண்டால் முதல் 600 குவிண்டால் வரை மகசூல் செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் தர்பூசணியை பயிரிட, 40 முதல் 55 ஆயிரம் வரை செலவாகலாம். இதனை, சந்தையில் கிலோ ஒன்றிற்கு 8 முதல் 10 ரூபாய் வரை விற்கலாம். விவசாயிகள், இதனால் ஒரு தர்பூசணி பயிர் மூலமாக 2 முதல் 3 லட்ச ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம். தற்போதைக்கு உத்திரபிரதேசம், கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் தர்பூசணி மகசூல் செய்யப்படுகிறது. பிற விவசாய பயிர்களுடன் ஒப்பிட்டால் தர்பூசணி குறைவான நேரத்தை மட்டுமே மகசூலுக்காக எடுத்துகொள்ளப்படுகிறது.


மேலும் படிக்க | Bank Locker Rules: உங்களிடம் வங்கி லாக்கர் உள்ளதா? இந்த 5 விஷயங்களில் கவனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ