பொதுத்துறை வங்கியான கனரா வங்கி (Canara Bank), நிலையான வைப்புகளின் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. அதாவது, இப்போது முன்பை விட அதிக வட்டி கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்களும் ஒரு வங்கி FD (Fixed Deposite) பெற நினைத்தால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது… பொதுத்துறை வங்கியான கனரா வங்கி (Canara Bank) நிலையான வைப்புகளின் (FD) வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. அதாவது, இப்போது முன்பை விட அதிக வட்டி கிடைக்கும். வங்கி வட்டி விகிதங்களை 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதையும் நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். இந்த அதிகரித்த வட்டியின் நன்மை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு FD பெற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.


புதிய வட்டி விகிதங்கள் என்ன


கனரா வங்கியின் (Canara Bank) கூற்றுப்படி, இந்த அதிகரிப்புக்குப் பிறகு, குறைந்தது 2 வருட Fixed Deposit மற்றும் 3 ஆண்டுகளுக்கு குறைவான மெச்யூரிட்டி உள்ள FD-களுக்கு இப்போது 5.4 சதவீத வட்டி கிடைக்கும். முன்னதாக இந்த வட்டி விகிதம் 5.2 சதவீதமாக இருந்தது. இது தவிர, 3 முதல் 10 ஆண்டுகள் மெச்யூரிட்டி உள்ள FD-களில் வட்டி விகிதம் 5.3 சதவிகிதத்திலிருந்து 5.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


ALSO READ | வாங்கும் கடனில் பாதி தொகைக்கு வட்டி கட்டினால் போதும்; ICICI-யின் புது திட்டம் இதோ


மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி கிடைக்கும்


வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மூத்த குடிமக்களுக்கு திருத்தப்பட்ட கட்டணத்தில் அரை சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படும். புதிய கட்டணங்கள் நவம்பர் 27 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. வட்டி விகிதங்களில் திருத்தத்திற்குப் பிறகு 2 முதல் 10 ஆண்டுகள் முதிர்வு காலம் வரையிலான நிலையான வைப்புகளுக்கு கனரா வங்கி பொதுத்துறை வங்கிகளிடையே அதிக வட்டி அளிக்கிறது.


HDFC வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தது


HDFC வங்கி (HDFC Bank) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான வைப்புத்தொகையின் (FD) வட்டி விகிதங்களை வங்கி குறைத்துள்ளது. இவை 0.20 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன.


HDFC வங்கி ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகளில் மெச்யூர் ஆகும் டெபாசிட்டுகளில் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. மீதமுள்ள கால வைப்புத்தொகையின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. HDFC வங்கியின் 1 ஆண்டு வைப்புக்கான வட்டி விகிதங்கள் (Interest Rates) 0.20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டு வைப்புத்தொகையில், வங்கி வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்துள்ளது.


ALSO READ | ATM-ல் பணம் எடுக்க புதிய விதிமுறை; 6 மணி நேரம் காத்திருக்க வேண்டும்


புதிய விகிதத்தின்படி, HDFC வங்கி 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான வைப்புத்தொகைக்கு 2.50% வட்டி அளிக்கிறது. 30-90 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு இது 3 சதவீதமாக உள்ளது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR