புதுடெல்லி: Income Tax Return (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, மத்திய நேரடி வரி வாரியம் ((CBDT ) Central Board of Direct Taxes) வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் காலக்கெடுவை 2020, டிசம்பர் 31 என்று நீட்டித்துள்ளது. இது பலருக்கும் சற்று ஆசுவாசத்தைக் கொடுத்துள்ளது.  ஆனால் வழக்கமான ஐ.டி.ஆர் அல்லது திருத்தப்பட்ட ஐ.டி.ஆர் (Revised ITR) நிரப்ப வேண்டியவர்கள் கணக்கை தாக்கல் செய்வதில் தாமதம் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனெனில் வருமான வரித் துறை கடுமையான அபராதம் விதிப்பதையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருமான வரித் துறை முதலில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 2020  ஜூன் 30ஆம் தேதியாக நீட்டித்திருந்தது. பிறகு அது, ஜூலை  31 ஆகவும், பின்னர் செப்டம்பர் 30 ஆகவும் நீட்டிக்கப்பட்டது, பிறகு மீண்டும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30ஆக மாற்றப்பட்டு, இறுதியாக தற்போது இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இதில் சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.


ஐ.டி.ஆர் தொடர்பான சில முக்கியமான தேதிகள்
1. ஐடிஆர் (ITR) தாக்கல் செய்யும் தேதி டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், அதன் மதிப்பீட்டு காலம் (Assesment Period) 2019 ஏப்ரல் 1 முதல் 2020 மார்ச் 31 வரை இருக்கும்.
2. தணிக்கை செய்யப்பட வேண்டிய வருமான வரி தாக்கல் செய்பவர்கள் (account is for audit) வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 ஜனவரி 31 ஆகும்.
3. சுய மதிப்பீடு (Self Assesment) பிரிவில் வருமானம் (income) 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் வரி செலுத்துவோருக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 ஜனவரி 31 ஆகும்.


Also Read | உலகில் அதிக வருமானம் ஈட்டும் Google CEO சுந்தர் பிச்சை.. அவருடைய மாத சம்பளம் என்ன?


திருத்தப்பட்ட அல்லது தாமதமான வருமான வரிக் கணக்கை நிரப்ப வாய்ப்பு


ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 க்கு இடையில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யாதவர்களுக்கு ஜூலை 31 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது, அதன் பிறகு அவர்கள் அபராதம் செலுத்தி ITR நிரப்ப வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது அத்தகைய வரி செலுத்துவோர் டிசம்பர் 31 க்குள் தங்கள் ITR-ஐ தாக்கல் செய்யலாம்.  


உரிய தேதியில் வருமான வரி கணக்கை நிரப்பாவிட்டால் அதற்கு தாமதமான ஐ.டி.ஆர் (Belated ITR) என்று அழைக்கப்படுகிறது, இது அந்தந்த மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year (AY)) முடிவடைந்த ஒரு வருடத்திற்குள் நிரப்பப்படலாம். அதாவது 2019-20 நிதியாண்டிற்கான ஐ.டி.ஆரை நிரப்ப வேண்டும் என்றால், அதை 31 மார்ச் 2021 க்குள் நிரப்பலாம், அதாவது 2021 மதிப்பீட்டு ஆண்டு முடிவதற்குள், அந்த வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.


ஆனால், தாமதமாக ஐ.டி.ஆர் நிரப்புவதற்கு அபராதம் உண்டு
1. வருமான வரிக் கணக்கை (ITR) தாமதமாக தாக்கல் செய்யும்போது,  அபராதமாக 10,000 ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கலாம். ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பிறகு ஆனால் டிசம்பர் 31 க்கு முன்னர் ITR  தாக்கல் செய்தால் 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
2. 2020 டிசம்பர் 31க்குப் பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் 10,000 ரூபாய் அபராதம் (Penalty) செலுத்த வேண்டும்.
3. குறைந்த அளவு வரி செலுத்துவோருக்கு அபராதத்தில் சிறிது நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் 1000 ரூபாய் ஆகும்.
வரி ஏய்ப்பு தொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை கடுமையான விதிமுறைகளைக் கொண்டுள்ளது. 25 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தால், 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


Also Read | வருமான வரி தாக்கல் சிக்கலின்றி செய்ய தேவையான 5 ஆவணங்கள் 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR