மக்களுக்கு வாகனம் ஓட்டுவதில் பயிற்சியளிப்பதில் சாதனை நடத்திய நிறுவனம் ஒரு இந்திய நிறுவனம். ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சி கொடுத்து வாகன ஓட்டிகளாக மாற்றிய நிறுவனம், ஒரு கார் உற்பத்தி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சாதனையை செய்திருப்பது மாருதி சுசுகி டிரைவிங் ஸ்கூல் (MSDS). புதிய மைல்கல்லை எட்டியுள்ள MSDS, 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சியை வழங்கியுள்ளது.  மாருதி சுசுகியின் கார் ஓட்டுநர் பள்ளி மாருதி சுசுகி டிரைவிங் ஸ்கூல் (எம்.எஸ்.டி.எஸ்) 1.5 மில்லியன் பேருக்கு பயிற்சியளித்து ஒரு புதிய மைல்கல் சாதனையை பதிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.  



எம்.எஸ்.டி.எஸ் இந்தியாவின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.  


Also Read | ‘Bullet Thali’ மெகா உணவை சாப்பிட்டால், Royal Enfield Bullet bike இலவசம்? வெல்லத் தயாரா?   


"மாருதி சுசுகி டிரைவிங் ஸ்கூல் (எம்.எஸ்.டி.எஸ்) குடிமக்களுக்கு சிறந்த முறையில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 238 நகரங்களில் 492க்கும் மேற்பட்ட பயிற்சி பள்ளிகளுடன் கூடிய இந்தியாவின் முன்னணி தொழில்முறை ஓட்டுநர் பள்ளி சங்கிலியாக இது வளர்ந்துள்ளது ”என்று மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (எம்.எஸ்.ஐ.எல்) நிர்வாக இயக்குநர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) சஷாங்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.


எம்.எஸ்.டி.எஸ் நெட்வொர்க்கில் சுமார் 1400 சான்றளிக்கப்பட்ட மற்றும் தகுதிவாய்ந்த நிபுணர் பயிற்சியாளர்கள் உள்ளனர் என்று நிறுவனத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.  


Also Read | Personal Finance: SBI Annuity திட்டத்தில் மாத வருவாய் எவ்வளவு தெரியுமா? 


எம்.எஸ்.டி.எஸ் ஓட்டுநர் பள்ளி பயிற்சி முறை ஓட்டுநர் சிமுலேட்டர்கள் மற்றும் நடைமுறை மற்றும் தத்துவார்த்த படிப்புகளை உள்ளடக்கியது.


எம்.எஸ்.டி.எஸ், தரமான பாடத்திட்டத்தின் மூலம் தரமான பயிற்சிக்கு உதவுகிறது, இதில் சாலை ஓட்டுநர் சூழ்நிலைகள் மற்றும் நிபுணர்களின் வகுப்பறை பயிற்சி ஆகியவை அடங்கும் என்று நிறுவனத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.  


தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களுடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் Maruti Suzuki Driving School, சாலையில் அபாயங்களைக் குறைப்பதற்கும் உதவுகிறது.


Also Read | Maruti Cars பம்பர் தள்ளுபடி, ஒவ்வொரு மாடலிலும் மாபெரும் சேமிப்பு   


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR