SBI Saving Account தொடங்க வேண்டுமா? வங்கி போக அவசியமில்லை.. உங்கள் மொபைல் போதும்
நேரடியாக ஆன்லைன் (Online Bank Account) மூலம் வங்கி சேமிப்பு கணக்கை தொடங்கலாம். மேலும் சேமிப்புக் கணக்கை தொடங்க வாடிக்கையாளர் பான் மற்றும் ஆதார் மட்டுமே செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
SBI online E services : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI - எஸ்பிஐ) அதன் வலைத்தளத்திலிருந்து ஆன்லைன் மூலம் சேமிப்புக் கணக்கைத் (Saving Bank Account) திறக்கும் வசதியை வெள்ளிக்கிழமை தொடங்கியது. வங்கியின் யோனோ மூலம் டிஜிட்டல் (Digital Account) சேமிப்புக் கணக்கைத் திறக்க இந்த வசதியைப் பயன்படுத்தலாம். யோனோ (Yono) என்பது வங்கி மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான சேவையாகும்.
இன்ஸ்டா சேவிங் வங்கி கணக்கின் (Insta Saving Bank Account) இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளருக்கு எந்தவித ஆவணங்கள் எடுத்து வங்கிக்கு செல்வது போன்ற சிரமங்கள் இருக்காது. நேரடியாக ஆன்லைன் (Online Bank Account) மூலம் வங்கி சேமிப்பு கணக்கை தொடங்கலாம். மேலும் சேமிப்புக் கணக்கை தொடங்க வாடிக்கையாளர் பான் மற்றும் ஆதார் மட்டுமே செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் கணக்கை தொடங்கும் வாடிக்கையாளர் சேமிப்புக் கணக்கின் (SBI savings account) அனைத்து அம்சங்களையும் பெறுவார் என்று வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்தார். இதற்காக, அவர்கள் வங்கி கிளைக்கு கூட செல்ல தேவையில்லை. யோனோவிலிருந்து சேமிப்புக் கணக்கைத் திறக்கும் அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் வங்கி அவர்களின் பெயரில் ரூபே (RuPay) ஏடிஎம் டெபிட் கார்டை (SBI Card) வழங்கும்.
முன்னதாக, அதில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ .5 லட்சம் வரை முழுமையாக காப்பீடு செய்யப்படுவதாக வங்கி (State Bank of India) கூறியிருந்தது. அதாவது, 5 லட்சம் ரூபாய் வரை வைப்புத்தொகைக்கு காப்பீடு வழங்குகிறார்.
எஸ்பிஐயின் (SBI Tweet) ட்வீட்டின் படி, இந்திய காப்பீட்டு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (டிஐஜிசி - DIGC) திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள், நிலையான வைப்புத்தொகை (எஃப்.டி - FD), வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான வைப்புத்தொகை (ஆர்.டி - RD) ஆகியவற்றில் ரூ .5 லட்சம் நிபந்தனைகளுடன் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. .
வங்கியின் (State Bank of India) கூற்றுப்படி, இதில் முதன்மை மற்றும் வட்டி இரண்டுமே அடங்கும். முன்னதாக, வங்கி வைப்புகளின் காப்பீட்டுத் தொகை அதிகரிப்பதால், பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாது என்று வங்கி கூறியிருந்தது. 2020 பட்ஜெட்டில் வங்கியில் வைப்புத்தொகைக்கான உத்தரவாதத்தை 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அரசாங்கம் உயர்த்தியது.