முக்கிய துரித உணவு வணிகமான டோமினோஸ் (Domino's Pizza ) பீட்சா உணவிற்கான விலையை 50 சதவீதம் வரை  தள்ளுபடி செய்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தற்போது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெற்று வரும் நிலையில், பீட்சாவுடன் போட்டிகளை கண்டு களிக்க, இப்போது வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பெரிய சைவ பீட்சாக்களை வெறும் ரூ.499க்கு வாங்கி நண்பர்களுடன் பார்டி அனுபவிக்க முடியும். இது அவர்களின் முந்தைய விலையான ரூ.799 என்ற விலையிலிருந்து குறிப்பிடத்தக்க தள்ளுபடி விலை ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீட்சாக்களை மிக குறைந்த விலையில் பெறலாம்


இதேபோல், அசைவ பீட்சா பிரியர்கள் இப்போது பெரிய பீட்சாக்களை ரூ.549 க்கு மிக குறைந்த விலையில் பெறலாம். முந்தைய விலையான ரூ.919ல் இருந்து கணிசமான குறைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வாடிக்கையாளர்கள், கிரிக்கெட் போட்டிகளை நண்பர்களுடன் சேர்ந்து இரண்டிப்பு ஆனந்தத்துடன் பார்த்து ரசிக்கலாம்.


உலக கிரிக்கெட் கோப்பை 


உலக கிரிக்கெட் கோப்பை (ICC Cricket World Cup) என்னும்  முக்கியமான விளையாட்டு நிகழ்வின் போது, பொதுவாக ஆர்டர்கள் அதிகரிக்கும். இந்நிலையில் விற்பனையை மேம்படுத்தவும், போட்டித்தன்மையை தக்கவைக்கவும் இந்த சலுகை பெறுமளவு உதவும்  என நிறுவனம் நம்புகிறது. 


பீட்சாக்களில் கணிசமான தள்ளுபடி


டோமினோஸ் இந்தியா ஒரு பரந்த வாடிக்கையாளர் தளத்தை ஈர்க்கும் வகையில் பெரிய பீட்சாக்களில் கணிசமான தள்ளுபடியுடன் தினசரி தள்ளுபடிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. Howzzat50 கூப்பன் குறியீடுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பீட்சாவில் 50 சதவீத தள்ளுபடியைப் பெறுகிறார்கள்.


டோமினோஸ் இந்தியா வழங்கும் அசத்த ஆஃபர்


இயற்கையாகவே, உலகக் கோப்பையின் போது துரித உணவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. சலுகை விலையில் பீட்சாக்களை விற்பதன் மூலம், டோமினோஸ் இந்தியா தனது போட்டி நிறுவனங்களை விட விற்பனை பெருமளவு அதிகரிக்கும் என்று நம்புகிறது.


மேலும் படிக்க | ஐபோன் 14: ஆஃபரில் பிளிப்கார்ட் சரவெடி.. வெறும் 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்!


பிட்சா விற்பனையை அதிகரிக்க சலுகை அறிவிப்பு


மற்ற உணவு வகைகள், குறிப்பாக பர்கர்கள் மற்றும் பிரியாணி, போன்றவற்றை விட பிட்சா விற்பனையை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக, டோமினோஸ் பால் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற முக்கியமான உள்ளீடுகளின் விலையில் சில ஸ்திரத்தன்மையைக் கண்டுள்ளது, இதனால் வணிகம் இந்த நன்மைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனுமதிக்கிறது.


டோமினோஸ் இந்தியா அவுட்லெட்டுகள்


23 புதிய இடங்களைத் தொடங்கி, புதிய நகரங்களிலும் தனது கால் தடங்களை பதித்துள்ளதன் மூலம், டோமினோஸ் இந்தியா தனது அவுட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, இப்போது 394 நகரங்களில் 1,838 இடங்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக,  நான்கு புதிய Popeyes உணவகங்களைத் திறந்து, மணிப்பால் மற்றும் கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தபட்டு இப்போது நான்கு நகரங்களில் மொத்தம் 17 இடங்களில் இதன் அவுட்லெட்டுகள் உள்ளன.


இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகின்றன. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. உலக கோப்பையை 2 முறை வெறு சாம்பியன் பட்டத்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இதில் முதல்முறையாக தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஒன்பிளஸ் 11ஆர்: 5ஜி 18ஜிபி ரேம்... இந்தியாவில் அறிமுகம்! இவ்ளோ சிறப்பம்சங்களா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ