புது டெல்லி: நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் வங்கியுடன் (Online Banking) வசதிகள் மேம்பட்டிருக்கலாம், ஆனால் இது கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய சிரமங்களையும் உருவாக்கியுள்ளது. நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் மோசடி (Digital Fraud) குறித்து வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி (RBI) அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கைகளை வெளியிடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகரிக்கும் வங்கி மோசடிக்கு எதிராக SBI எச்சரிக்கிறது
வேகமாக வளர்ந்து வரும் வங்கி மோசடி குறித்து SBI தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது APP மூலம் வங்கி தொடர்பான அனைத்து வசதிகள் செய்யப்படுகின்றன, ஆனால் வங்கி தகவல்களை மொபைலில் சேமித்து வைத்திருக்கும் நபர்களில் நீங்களும் இருந்தால், உங்களுக்கு ஆபத்து நேரிடலாம்.


SBI எச்சரிக்கை விடுத்தது
நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் மோசடி வழக்குகளில் (Online Fraud) கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று SBI கூறியுள்ளது. உங்கள் வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை ஒருபோதும் மொபைலில் சேமிக்கக்கூடாது. உங்கள் வங்கி PIN, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தகவல் மற்றும் CVV போன்றவற்றை மொபைலில் சேமித்து வைத்தால் அதை எளிதாக மற்றவர்களால் பயன்படுத்தலாம் என்று SBI எச்சரித்துள்ளது, எனவே இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று SBI தெரிவித்து உள்ளது.


ALSO READ | SBI Customers Alert: வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ வங்கி அநியாய வசூல்!


இந்த தகவல்களை உங்கள் மொபைலில் இருந்து உடனடியாக நீக்கவும். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், ஆன்லைன் மோசடிக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. வாடிக்கையாளர்கள் இதுபோன்ற தவறை செய்யக்கூடாது என்று SBI கூறியுள்ளது. எனவே உங்கள் வங்கி கணக்கு மற்றும் ஆன்லைன் வங்கி தகவல்களை தொலைபேசியில் சேமிக்க வேண்டாம்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR