டெல்லியில் இப்போது டிரைவிங் லைசென்ஸ் பெறுவது சற்று கடினமாக இருக்கும், ஏனெனில் அனைத்து சோதனை  நடவடிக்கைகளும் ஜனவரி 2023 இறுதிக்குள் தானியங்கி முறையில் இயக்கப்படும்.  டெல்லியில் மொத்தம் 13 டிரைவிங் டெஸ்ட் டிராக்குகள் உள்ளன, ஏற்கனவே 12 டெஸ்ட் டிராக்குகள் தானியங்கு முறையில் சென்றுவிட்டது.  தற்போது லாடோ சராய் பகுதியில் மட்டும் டிரைவிங் சோதனை மேனுவலாக செய்யப்படுகிறது, இந்த பாதையும் விரைவில் தானியங்கு முறையில் மாற்றப்பட்டு விடும்.  டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு முன்னர் விண்ணப்பதாரர்களின் டிரைவிங் திறனை நியாயமான முறையில் மதிப்பிடுவதற்காகவும், ஆர்டிஓ அலுவலகங்களில் நடைபெறும் ஊழலை தடுப்பதற்காகவும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் தானியங்கி ஓட்டுநர் சோதனை தடம் ஆரம்பிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 7th Pay Commission: 2023-ல் அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பார்ட்!



இவ்வாறு தானியங்கு முறையில் சோதனை தடங்கல் அமைக்கப்பட்ட பிறகு மனிதர்களின் தலையீடு இந்த விஷயத்தில் இருக்காது.  இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் எவ்வித மோசடியும் செய்யமுடியாது, முறையாக அனைத்து தேர்விலும் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை இந்த முறை காட்டுகின்றது.  டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள மனிதர்கள் தலையீடு இல்லாமல் நடக்கும் இந்த செயல்முறையின் மூலமாக சாலையில் சிறந்த ஓட்டுனர்களை காணலாம்.  


இதுதவிர இவ்வாறு தானியங்கு தடங்களில் நடத்தப்படும் ஓட்டுநர் சோதனையில் முதல் தடவை விண்ணப்பதாரர்கள் யாரேனும் தோல்வி அடைந்திருந்தால், அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதை சுட்டிக்காட்டி அடுத்த தடவை அவர்கள் வெற்றிபெற உதவும்.  இந்த தானியங்கி ஓட்டுநர் உரிமத் தேர்வின் ஒரு பகுதியாக, விண்ணப்பதாரர்கள் இந்த தடங்களில் 24 பாராமீட்டர்கள் மூலம் நிறுவப்பட்ட சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் சோதிக்கப்படுகிறார்கள்.


மேலும் படிக்க | போஸ்ட் ஆபிஸ் மூலம் கடன் பெறலாம்! இதை செய்தால் மட்டும் போதும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ