புதுடில்லி: தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் 7.5% குறைந்துள்ளது. முழு நிதியாண்டை பார்க்கும் போது பொருளாதாரம் 9.5%  குறையலாம் என இந்திய ரிசர்வ் வங்கி முன்பு மதிப்பிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2020-21 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ரூ .33.14 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டில் இந்த அளவு ரூ .35.84 லட்சம் கோடியாக இருந்தது. சென்ற வருடம் இதே காலாண்டில் 4.4% வளர்ச்சியை காட்டிய மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்த வருடம் 7.5% குறைந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடுமையான கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக  23.9 சதவீதம் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இது வளர்ச்சி ஏற்படுவதற்கான அறிகுறிகளை காட்டினாலும், இன்னும் பொருளாதாரம் இன்னும் மந்த நிலையில் உள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது. எனினும் பொருளாதாரம் மீண்டும் வலர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையும் உண்டாகிறது.


ஏனென்றால், முதல் காலாண்டில், 23.9 சதவிகிதம் என்ற அளவில் குறந்த பொருளாதாரம் (Economy) , தற்போது அடுத்த காலாண்டில் 7.5 சதவிகிதம் குறைந்துள்ளது. இது சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.



மேலும் இது எதிர்பார்க்கப்பட்ட அளவை விட சற்று குறைவாகவே வீழ்ச்சியை கண்டுள்ளது என்பதும் ஒரு சிறந்த விஷயம் ஆகும். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மெதுவான வேகத்தில் இருந்தாலும், ஒரே சீராக, வலுவாக வளர்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.


ALSO READ | Paytm பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கான Good News என்ன தெரியுமா... !!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR