இந்திய பிரதமர் நரேந்திர மோடி தூய்மையான போக்குவரத்தை செயல்படுத்தும் நோக்கில் 20% எத்தனாலுடன் பெட்ரோல் கலந்த E20 எரிபொருளை பெங்களூருவில் அறிமுகப்படுத்த உள்ளார்.  சுற்றுச்சூழல் நலனை கருத்திற்கொண்டு என்னதான் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து வந்தாலும் பெரும்பாலான மக்களால் இதை வாங்க முடியாது.  இதன் விளைவாக, E20 அல்லது ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனங்கள் உங்களுக்கு செலவை ஏற்படுத்தாமல், அதேசமயம் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காமல் இருக்கிறது.  எரிபொருள் தவிர பிரதமர் பசுமை இயக்க பேரணியையும் தொடங்கி வைக்கிறார்.  இந்த பேரணியின் நோக்கம் பசுமை எரிசக்தியால் இயங்கும் வாகனங்களை காட்சிப்படுத்துவதுடன், பசுமை எரிபொருட்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதேயாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Valentine Day 2023: காதலர் தினத்தை மறக்கமுடியாத நாளாக மாற்ற யோசனைகள்


'E20' என்பது 20 சதவிகிதம் எத்தனால் மற்றும் 80 சதவிகிதம் பெட்ரோல் கலவையாகும்.  'E20' என்ற பெயரில் '20' என்ற எண் பெட்ரோல் கலவையில் உள்ள எத்தனாலின் விகிதத்தைக் குறிக்கிறது.  தெளிவாக கூறினால் இந்த பெட்ரேலில் அதிக எண்ணிக்கையில் எத்தனால் இருக்கும். இந்தியாவின் தற்போது பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் உள்ளது, இது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.  இந்தியாவில் உள்ள பொது மக்களுக்கு விரைவில் E20 எரிபொருள் கிடைக்க அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  உயிரியில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால், அதற்கு கச்சா எண்ணெய் தேவையில்லை. எத்தனால் பெரும்பாலும் சோளம் மற்றும் கரும்பு போன்ற பயிர்களில் இருந்து பெறப்படுகிறது.  இந்தியா ஏற்கனவே போதுமான அளவு தானியங்கள் மற்றும் கரும்புகளை உற்பத்தி செய்கிறது. 



சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக உயிரி எரிபொருள் மக்களிடத்தில் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவின் எரிபொருள் தேவையில் 85% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது, இதன் காரணமாக தான் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.  இந்தியாவில் 20% எத்தனால் கலவையுடன் பெட்ரோலைப் பயன்படுத்தினால் நாட்டிற்கு பெரும்பான்மையான நிதி மிச்சப்படும்.  பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பது என்ற இலக்கை அடைவது நாட்டின் விவசாயத் தொழிலுக்கு பயனளிக்கும் என்று இந்திய அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.  அரசின் இந்த நடவடிக்கையால் விவசாயிகளின் வருமானம் உயரும் என்று அரசு உறுதியாகக் கூறுகிறது.  E20 எரிபொருள் வாகனம் E20 பெட்ரோல் கலவையை கையாளக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடதக்கது. எடுத்துக்காட்டாக ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் க்ரெட்டா, வென்யூ மற்றும் அல்காசர் எஸ்யூவிகள் ஆகியவை 2023 எம்ஒய் மாடல் ஆண்டில் E20 பெட்ரோலில் இயங்க முடியும் என்று கூறப்படுகிறது.  ஏப்ரல் 2023-க்குள் மஹிந்திரா, மாருதி சுஸுகி, கியா மற்றும் பிற நிறுவனங்களால் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கும் இந்த புதுமையை புகுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | வங்கியில் கடன் வாங்க திட்டமா? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ