வங்கியில் கடன் வாங்க திட்டமா? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க!

பான் கார்டு உதவியுடன் உங்கள் கடன் கணக்குகள் அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் அவற்றின் செலுத்தும் நிலை, நாள்பட்ட நிலுவைத் தொகைகள் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

Written by - RK Spark | Last Updated : Feb 5, 2023, 05:43 PM IST
  • சிபில் ஸ்கோர் என்பது உங்கள் கடன் வரலாற்றின் 3 இலக்க எண் சுருக்கமாகும்.
  • சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருந்தால் கடன் வாய்ப்பு அதிகம்.
  • சிபில் ஸ்கோர் 900 அல்லது அதற்கு மேல் இருந்தால் உங்களுக்கு கடன் பெறுவது எளிது.
வங்கியில் கடன் வாங்க திட்டமா? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க!  title=

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தேவைகளுக்காக வங்கி அல்லது ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்திலிருந்து கடனை பெறுகின்றனர். கடன் பெறுவது அவ்வளவு சுலபமல்ல, கடன் பெறுவதற்கு நாம் தகுதியானவர் என்பதை சோதித்து தான் வங்கிகள் ஒருவருக்கு கடனை வழங்குகிறது. கடன் வழங்குவதற்கு சில நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிப்பது இருந்தாலும் உங்களது சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம். உங்களது சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால் தான் உங்களுக்கு வங்கிகள் உடனே பெரியளவில் கடன் தொகையை வழங்கும். கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் (சிபில்) மதிப்பெண் என்பது உங்கள் கடன் வரலாற்றின் 3 இலக்க எண் சுருக்கமாகும். உங்கள் சிபில் அறிக்கையின் 'அக்கவுண்ட்ஸ்' மற்றும் 'என்கொய்ரிஸ்' ஆகிய விவரங்களைப் பயன்படுத்தி இது பெறப்படுகிறது. பான் கார்டு உதவியுடன் உங்கள் கடன் கணக்குகள் அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் அவற்றின் செலுத்தும் நிலை, நாள்பட்ட நிலுவைத் தொகைகள் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | நீங்களே சமைத்து சாப்பிடுங்கள்... கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்...

நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் தகுதியினை அடிப்படையாக வைத்து வங்கிகள் உங்களுக்கு கடன் தொகையை வழங்குகிறது. உங்கள் சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருந்தால், உங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. உங்கள் சிபில் ஸ்கோர் 900க்கு நெருக்கமாக இருந்தால் உங்களுக்கு தாராளமாக கடன் வழங்கப்படும். கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் (சிபில்) 2000-ல் இணைக்கப்பட்டது மற்றும் அதன் செயல்பாடுகளை ஏப்ரல் 2004-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரெடிட் ஸ்கோர் சிபில் ஸ்கோர் ஆகும். கடன் வழங்குபவர்கள் உங்களுக்கு கடன் வழங்கும்போது சிபில் ஸ்கோரை தான் முக்கியமான காரணியாக பார்க்கின்றனர்.

நீங்கள் கடனை திருப்பி செலுத்திய வரலாறு, கிரெடிட் வெளிப்பாடு, கடன் வகை மற்றும் கால அளவு ஆகியவற்றை முதன்மையாக கொண்டு சிபில் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. தாமதமாக கடன் தொகையை செலுத்துவது அல்லது தவணை தொகையை செலுத்தத் தவறுவது போன்றவற்றால் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். பல கடன் உங்கள் ஸ்கோர் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம், அதிக கடன் உங்களுக்கு காலப்போக்கில் கடன் சுமையை அதிகரித்துவிடும். சரியான முறையில் நிதிச் சுழற்சியைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சிபில் ஸ்கோரை மேம்படுத்தலாம், உங்கள் கிரெடிட் கார்டு பில்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துங்கள், தவணை தொகைகளை தவறாமல் செலுத்துங்கள். சரியான நேரத்தில் கடன் தொகைகளை நிலுவையில் இல்லாமல் செலுத்துவது உங்களது சிபில் ஸ்கோரை நல்ல நிலையில் வைத்திருக்கும்.

மேலும் படிக்க | Saving Scheme: சுகன்யா சம்ரிதி யோஜனா...வெளியான முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News