ஒரு நபர் ஒரு தொழிலை தொடங்க வேண்டுமென்றால் அதற்கு மிகப்பெரியளவிலான தொகையை முதலீடு செய்யவேண்டும், இது தொழில் தொடங்க நினைக்கும் பலருக்கும் சவாலானதாக இருக்கிறது.  ஆனால் அதுவே குறைந்த முதலீட்டில் மாதந்தோறும் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை சம்பாதிக்க வழி இருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்.  பணம் எடுக்க பயன்படுத்தப்படும் ஏடிஎம்-ஐ வைத்து பணம் சம்பாதிக்கும் முறை தற்போது பயனுள்ளதாகவும், பிரபலமாகவும் இருந்து வருகிறது.  ஏடிஎம் உரிமையை நீங்கள் பெற வேண்டுமானால், அதற்கான ஒப்பந்தத்தை வைத்திருக்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்! எவ்வளவு தெரியுமா?


எடுத்துக்காட்டாக, நீங்கள் எஸ்பிஐயின் ஏடிஎம் உரிமையைப் பெற விரும்பினால்,  இந்தியா ஒன் ஏடிஎம் அல்லது டாடா இண்டிகேஷ் அல்லது முத்தூட் ஏடிஎம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.  இவைதான் இந்த நிறுவனங்கள் தான் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, பிஎன்பி மற்றும் ஹெச்டிஎஃப்சி போன்ற பெரும்பாலான வங்கிகளுக்கான ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.  ஏடிஎம் கேபின் அமைப்பதற்கு அனுமதி பெற விண்ணப்பதாரர்கள் ரூ.2 லட்சம் செக்யூரிட்டி தொகை மற்றும் ரூ.3 லட்சம் ஏடிஎம் கேபினுக்கு டெபாசிட் செய்ய வேண்டும்.  ஏடிஎம் கேபின் அமைக்க, நீங்கள் மொத்தமாக சுமார் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும், இருப்பினும் இந்த தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும்.  ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் உங்களுக்கு 8 ரூபாய் கிடைக்கும், அதேபோல ஒவ்வொரு பணமில்லா பரிவர்த்தனைக்கும் உங்களுக்கு 2 ரூபாய் கிடைக்கும்.


ஏடிஎம் கேபினை அமைப்பதற்கான நிபந்தனைகள்:


1) விண்ணப்பதாரர் 50 முதல் 80 அடி பரப்பளவு கொண்ட நிலத்தை சொந்தமாக வைத்து இருக்க வேண்டும்.


2) மற்ற ஏடிஎம்களில் இருந்து குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்.


3) ஏடிஎம் கேபின் மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் வைக்கப்பட வேண்டும்.


4) எல்லா நேரங்களிலும் குறைந்தபட்சம் 1 கிலோவாட் மின்சார இணைப்பு ஏடிஎம் கேபினுக்கு இருக்க வேண்டும்.


5) கேபின் கான்கிரீட் கூரையுடன் கூடிய நிரந்தர கட்டிடமாக இருக்க வேண்டும். 


ஏடிஎம் கேபின் அமைக்க சமர்ப்பிக்க வேண்டிய முக்கியமான ஆவணங்கள்: 


1) ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை
2) ரேஷன் கார்டு, மின் கட்டணம்
3) வங்கி கணக்கு மற்றும் பாஸ் புத்தகம்
4) புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண்
5) ஜிஎஸ்டி எண்
6) நிறுவனத்திற்கு தேவையான நிதி ஆவணங்கள்


மேலும் படிக்க | மார்ச் 1, 2023 முதல் பல விதிகளில் மாற்றம்: சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ