சொந்த வீடு என்ற இலட்சியத்தை அடைய, மோசமான கிரெடிட் ஸ்கோர், குறைந்த வருமானம் பிற கடன்கள் காரணமாக உள்ளன. சரி, கடன் வாங்கி வீடு வாங்கலாம் என்றால், அதிலும் பல பிரச்சனைகள் இருந்தாலும் சொந்த வீடு என்ற கனவை நனவாக்காமல் விட்டு விட முடியுமா? சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்ற வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவது நல்ல முடிவு என்றால், அதிலும், கூட்டு வீட்டுக் கடன் வாங்குவது மேலும் பல நன்மைகளைக் கொடுக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டை வாங்க கடன் வாங்க திட்டமிடும்போது, கூட்டுக் கடன் வாங்கினால், அதில் பல நன்மைகள் கிடைக்கும் அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்...


கூட்டு வீட்டுக் கடன் நன்மைகள்


நீங்கள் வீட்டை வாங்கப் போகிறீர்கள் அதிலும் கடன் வாங்கி வீடு வாங்கினால், மனைவி, சகோதரி, தாய், மகள் என குடும்பத்தை சேர்ந்த பெண்ணுடன் சேர்த்து வாங்குவது நல்லது. இதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. அவற்றில் சில...


கடன் எளிதாகக் கிடைக்கும்


மோசமான கிரெடிட் ஸ்கோர், குறைந்த வருமானம் மற்றும், பிற கடன்கள் என கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும். இதனால் பல நேரங்களில் வீட்டுக் கடன் (Home Loan) வாங்குவதில் பல சிரமங்கள் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், கூட்டு வீட்டுக் கடன் வாங்குவது உதவியாக இருக்கும். கூட்டாக வீடு வாங்கும் இருவருமே கடனை திருப்பிச் செலுத்த கடமைப்பட்டவர்கள் என்பதால், பொறுப்பு பகிரப்படுகிறது. 


வீட்டுக்கடன் வாங்கும்போது, மற்றொரு நபரை விண்ணப்பதாரராக சேர்ப்பதன் மூலம் கடன் பெறுவதற்கான தகுதி அதிகரிக்கிறது. கூட்டுக் கடனில் சம்பந்தப்பட்ட மற்ற நபரின் செலுத்தும் திறன் நன்றாக இருந்தால், கடன் எளிதாகக் கிடைக்கும்.


மேலும் படிக்க | வீட்டுக் கடன்... பிக்ஸட் அல்லது ப்ளோட்டிங் வட்டி... எது பெஸ்ட்?


கடன் தொகை வரம்பு அதிகரிக்கும்
விண்ணப்பதாரரின் வருமானத்திற்கு ஏற்பvஏ கடன் வழங்கப்படுகிறது. ஆனால் கூட்டுக் கடனில் இருவரின் மொத்த வருமானம் கணக்கில் கொள்ளப்படுவதால், கடன் தொகை வரம்பு அதிகரிக்கிறது. ஆனால் விண்ணப்பிப்பவர்களின் வருமான விகிதத்திற்கான கடன் 50 முதல் 60 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


பெண் விண்ணப்பதாரர்
கடன் வாங்க விண்ணப்பிக்கும்போது, ஒரு பெண் இணை விண்ணப்பதாரராக இருந்தால், கூட்டு வீட்டுக் கடனில் வட்டி சிறிது குறையலாம். பல கடன் வழங்குநர்கள் பெண் இணை விண்ணப்பதாரர்களுக்கு வெவ்வேறு வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை வழங்குகிறார்கள். இந்த விகிதம் வழக்கமான வீட்டுக் கடன் விகிதத்தை விட 0.05 சதவீதம் (5 அடிப்படை புள்ளிகள்) குறைவாக இருக்கும். 


வருமான வரி சலுகைகள்
கூட்டுக் கடனிலும் வருமான வரிச் சலுகைகள் கிடைக்கும். கூட்டு வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதன் மூலம், கடன் வாங்குபவர்கள் இருவரும் வருமான வரிச் சலுகைகளைப் பெறலாம். ஆனால் விண்ணப்பதாரர்கள் இருவரும் சொத்து உரிமையாளர்களாக இருந்தால் மட்டுமே இந்த பலன் கிடைக்கும்.


பெரிய வீட்டை வாங்கலாம்
நீங்கள் விரும்பிய இடத்தில் வீடு வாங்குவதற்கும், பெரிய வீட்டை வாங்குவதற்கும் கூட்டு வீட்டுக் கடன் உதவி செய்யும், கடன் தொகை அதிகமாக கிடைக்கும் என்பதால் இந்த வசதி கிடைக்கும். அதிலும், இணை விண்ணப்பதாரராக பெண் இருக்கும்போது, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைப்பதால் பண பலன்களும் அதிகரிக்கிறது.


மேலும் படிக்க | EPFO Update: பணி ஓய்வுக்கு முன் பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி? இதற்கான விதிகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ