ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, டெஸ்லா (Tesla) இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் (Elon Musk) உலகின் ஏழாவது பணக்காரர் என்ற பெருமையை பெற்றார். வெள்ளிகிழமையன்று எலன் மஸ்க்கின் நிகர மதிப்பு, வாரன் பஃபெட்டின் (Warren Buffet) மதிப்பை  கடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மின்சார கார்களின் தயாரிப்பாளரான இவரது பங்குகள் 10.8% அதிகரித்ததைத் தொடர்ந்து, மஸ்கின் சொத்து வெள்ளிக்கிழமையன்று 6.07 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.


முன்னதாக, இந்த வார தொடக்கத்தில், அவர், 2.9 பில்லியன் பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகளை தொண்டுக்கு நன்கொடையாக அளித்ததையடுத்து அவரது நிகர மதிப்பு குறைந்தது என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.


இவரது மின்சார கார்களுக்கான வணிகம் மிகச் சிறப்பாக இயங்குவதாகவும், தொடர்ந்து வர்த்தகத்தில் ஏற்படும் லாபத்தால், அவர் பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டு நிலையான இடத்தில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து இவரது நிறுவன பங்குகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.


டெஸ்லாவின் திட விநியோக எண்கள் லாபகரமான இரண்டாவது காலாண்டின் எதிர்பார்ப்புகளை உயர்த்தின.  அப்படி நடந்தால், நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக நான்கு காலாண்டுகளிலும்  லாபத்தைக் காட்டும் வகையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவைப் பொறுத்தவரை, முகேஷ் அமானி, லக்ஷ்மி மித்தல், ஷிவ் நாடார், கௌதம் அதானி ஆகியோர் உலக பணக்காரர் பட்டியலில் (Worlds Richest Man) இருக்கும் முக்கியப் புள்ளிகள் ஆவர்.


முன்னதாக, 2020 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி (Mukesh Ambani),  வாரன் பஃபெட்டை பின்னுக்குத்தள்ளி 8வது இடத்திற்கு முன்னேறினார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் இப்போது 68.3 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆனார்.


ALSO READ: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்டை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி


வியாழக்கிழமை நிலவரப்படி, வாரன் பபெட்டின் 67.9 பில்லியன் டாலர்களை மதிப்பை கடந்து இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானி முன்னேறினார். ஃபேஸ்புக் இங்க் மற்றும் சில்வர் லேக் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து அதன் டிஜிட்டல் யூனிட் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்றதால், மார்ச் மாதத்தில் குறைந்த அளவிலிருந்து அம்பானியின் இந்திய நிறுவனங்களின் பங்குகள் இருமடங்காக அதிகரித்துள்ளன.


ALSO READ: இயல்பு நிலைக்கு திரும்பும் இந்திய பொருளாதாரம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்