இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாகத் திகழும் பிளிப்கார்ட், தற்போது மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த விஷயம், இந்தியாவில் அதன் எதிர்கால வணிகத்தையும் பாதிக்கலாம் என்பதால், உலகம் முழுவதும் இந்த விவகாரம் கூர்ந்து கவனிக்கப்படும் விஷயமாகிவிட்டது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி என்ன தான் ஆனது பிளிப்கார்ட்டுக்கு? சந்தையில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக பல புதிய பிரிவுகளில் தனது தொழிலை விரிவாக்கம் செய்துவரும் பிளிப்கார்ட்டுக்கு தற்போது அமலாக்க துறை காரணம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது இந்த ஷோகாஸ் நோட்டீஸ் (show cause notice) அனுப்பப்பட்டுள்ளது, பிளிப்கார்ட் நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தடையாகலாம் என்றும் கூறப்படுகிறது. 


தற்போது அமலாக்கத்துறை இப்படி காரணம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பக் காரணம் என்ன?  பிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்திய வர்த்தகத்தில் செய்து வரும் அன்னிய முதலீடுகளை அமலாக்க துறை பல வருடங்களாக கண்காணித்து வருகிறது.


பல பிராண்டுகளின் பொருட்களையும் சில்லறை விற்பனையில் விற்று, நல்ல லாபம் ஈட்டும்  இந்த அந்நிய முதலீடு தொடர்பான விதிகளை தொடர்ந்து மீறி, முறைகேடுகளை செய்துவருவதை அமலாத்ததுறை கண்டுபிடித்துள்ளது. 



பிளிப்கார்ட் நிறுவனத்தின் அன்னிய முதலீடு விஷயத்தில் விதிமீறல்கள் செய்யப்பட்டிருப்பதாகவும்,  அதன் கூட்டணி விற்பனை நிறுவனமான WS Retail நிறுவனம் ஈகாமர்ஸ் தளத்தில் செய்து வரும் வர்த்தகம் இந்திய வர்த்தகச் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டது என்றும் அமலாக்க துறை குற்றம்சாட்டியுள்ளது.


விதிமீறல்களுக்காக பிளிப்கார்ட்டுக்கு 1.35 பில்லியன் டாலர் அபராதம் விதித்திருந்தது அமலாக்கத் துறை. ஆனால், நிறுவனம் அபராதம் செலுத்தவில்லை. எனவே அமலாக்க துறை தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


அதாவது விதிகளை மீறிய அவர்களுக்கு 10,000 கோடி ரூபாய் அதாவது 1.35 பில்லியன் டாலர் அளவிலான அபராதத்தை ஏன் விதிக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை நேரில் வந்து தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.


Also Read | 7th Pay Commission: ஊழியர்களின் சம்பளத்தில் 28% டி.ஏ வந்தது, உங்களுக்கு கிடைத்ததா?


அமலாக்கத் துறையின் சென்னை அலுவலகம், இந்த நோட்டீஸை பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அனுப்பியிருக்கிரது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால் மற்றும் தற்போது நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் முதலீட்டாளரான டைகர் குளோபல் ஆகியோருக்கு 10,000 கோடி ரூபாய் அபராதம் விதிப்பது தொடர்பான காரணம் கேட்பு நோட்டீசுக்கு பிளிப்கார்டின் எதிர்வினை என்ன?


இந்திய அரசின் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் கீழ், நிறுவனம் வர்த்தகம் செய்கிறது என்றும், எவ்விதமான விதிமீறல்களையும் செய்யவில்லை என பிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


2009 முதல் 2015 வரையிலான வர்த்தகம் குறித்த விளக்கத்தை தருமாறு அமலாக்க துறை அனுப்பிய நோட்டீசில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை முழுமையாக அளிப்பதாகவும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 


Also Read | Amazon Great Freedom Festival 2021: அமேசானில் தள்ளுபடி விலையில் பொருட்களை அள்ளலாம்


விதிமீறலில் ஈடுபட்டதாக சொல்லப்படும் WS Retail நிறுவனம் மற்றும் அதன் வர்த்தகம் 2015லேயே முழுமையாக மூடப்பட்டது. அமலாக்கத் துறையின் நோட்டீசுக்கு பிளிப்கார்ட் 90 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். 


2018ல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை அமெரிக்காவின் முன்னணி ரீடைல் நிறுவனமான வால்மார்ட் கைப்பற்றியது. இதன் பின்பு பிளிப்கார்ட் நிறுவனத் தலைவரான சச்சின் பன்சால், தன்னிடம் இருந்த பிளிப்கார்ட் பங்குகளை முழுமையாக விற்பனை செய்துவிட்டார்.அதன்பிறகு, பின்னி பன்சலிடம் ஓரளவு பங்கு தான் உள்ளது. 


தற்போது, பிளிப்கார்ட் நிறுவனம். ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் இருந்து 16 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டைப் பெற்றுள்ளது. பிளிப்கார்ட்   நிறுவனத்தில் முதலீடு செய்த டைகர் குளோபல் தான் பிளி தினசரி வர்த்தகம் நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளது.


Also Read | New Wage Code: சம்பளம் உயரும் ஆனால் உயராது, ஊதிய அமைப்பில் பெரிய மாற்றம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR