EPF வட்டி கணக்கீடு: 8.15% -இல் எவ்வளவு தொகை வரும்? இதை கணக்கிடுவது எப்படி?
EPF Interest Calculation: உங்கள் கணக்கில் எவ்வளவு வட்டி சேரும் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், அதற்கான முறை மிகவும் எளிதானது. ஒரு சிறிய சூத்திரத்தின் மூலம் இதை தெரிந்து கொள்ளலாம்.
EPF வட்டி கணக்கீடு: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கடந்த 2022-23 நிதியாண்டில் வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் அதிகரித்து 8.15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்கு நிதி அமைச்சகத்திடம் இருந்து ஜூலை மாதம் ஒப்புதல் கிடைத்துள்ளது. EPFO படி, ஆகஸ்ட் இறுதிக்குள், வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் வட்டி வரவு தொடங்கும். இந்தப் பணம் நாட்டின் 6.5 கோடி இபிஎஃப் சந்தாதாரர்களின் கணக்குகளைச் சென்றடையும். உங்கள் கணக்கில் எவ்வளவு வட்டி சேரும் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், அதற்கான முறை மிகவும் எளிதானது. ஒரு சிறிய சூத்திரத்தின் மூலம் இதை தெரிந்து கொள்ளலாம்.
EPF -இல் அதிக வட்டியின் பலன்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) வாரியம் CBT 2022-23 நிதியாண்டில் EPF கணக்கில் 8.15% வட்டியை மார்ச் 2023 இல் நிர்ணயித்துள்ளது. இதற்குப் பிறகு, ஜூலை 2023 இல் நிதி அமைச்சகத்தால் இது அங்கீகரிக்கப்பட்டது. வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி முந்தையதை விட அதிகரிக்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டில், EPF கணக்கில் 8.10 சதவீத வட்டி பெறப்பட்டது.
உங்கள் சம்பளத்தில் EPF எப்படி கழிக்கப்படுகிறது?
EPFO சட்டத்தின் படி, பணியாளரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 12% பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. 12% பங்களிப்பு நிறுவனத்தின் தரப்பிலிருந்தும் பணியாளரின் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்பட்டுகிறது. அதே நேரத்தில், ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) 8.33 சதவீத பணம் டெபாசிட் செய்யப்படுகிறது.
அதிக வட்டியால் உங்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்?
இப்போது EPF வட்டி கணக்கீடு பற்றி பேசலாம். இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம். ஒரு பணியாளரின் கணக்கில் மொத்தம் 10 லட்சம் ரூபாய் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். கடந்த நிதியாண்டில் 8.10% வட்டியின் படி 81,000 ரூபாய் பெற்றிருப்பார். மறுபுறம், EPF வட்டி விகிதத்தை 8.15% ஆக உயர்த்திய பிறகு, இந்த ரூ.10 லட்சத்திற்கு ரூ.81,500 வட்டி கிடைக்கும். வட்டியில் 0.05% அதிகரிப்பபு காரணமாக, அவருக்கு ரூ.500 வட்டியின் பலன் கிடைக்கும். ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தால், இந்த ஆண்டு ரூ.40,750 வட்டி கிடைக்கும். இங்கு ரூ.250 லாபம் கிடைக்கிறது.
மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்க போறீங்களா... SBI வழங்கும் அசத்தல் சலுகை... மிஸ் பண்ணாதீங்க!
உங்கள் EPF இருப்பு மற்றும் வட்டி பெறப்பட்டதா இல்லையா என்பதை எவ்வாறு பார்ப்பது?
EPF இருப்பை வீட்டில் இருந்தபடியே சரிபார்க்கலாம். இதில் பல விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உமங் ஆப், EPFO போர்ட்டல் அல்லது மொபைல் ஃபோனிலிருந்து SMS மூலம் இதை கண்டறியலாம்.
- EPFO போர்ட்டலுக்கு (www.epfindia.gov.in) செல்லவும்.
- E-PassBook விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- புதிய பக்கத்தில் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
- லாக் இன் செய்த பிறகு, பாஸ்புக்கிற்கான உறுப்பினர் ஐடி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- பாஸ்புக் PDF வடிவத்தில் கிடைக்கும், அதை பதிவிறக்கம் செய்யலாம்.
- https://passbook.epfindia.gov.in/ என்ற இணையதளத்தில் பாஸ்புக்கை நேரடியாக அணுகலாம்.
EPS என்றால் என்ன?
இது பணியாளர் ஓய்வூதியத் திட்டமாகும். அலுவலக பணிகளில் இருக்கும் பெரும்பாலான மக்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) அமைப்பில் கணக்கு வைத்துள்ளனர். இபிஎஃப் உடன், ஊழியர்களுக்கு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) கணக்கும் உள்ளது. இது ஓய்வூதிய நிதி என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத் தொகை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் தொகை ஊழியரின் நிறுவனக் கணக்கில் இருந்து டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால், இபிஎஸ் பணத்தை எப்போது எடுக்கலாம் என்பதில் மக்கள் பெரும்பாலும் குழப்பத்தில் உள்ளனர். EPS இலிருந்து பணத்தை எடுப்பது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | செப்டம்பர் மாதம்: ஆதார் முதல் எல்பிஜி வரை - இதெல்லாம் அதிரடியா மாறப்போகுது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ