பட்ஜெட்டுக்கு முன் நிதி அமைச்சகம் தந்த குட் நியூஸ்... குஷியில் பிஎஃப் உறுப்பினர்கள்
EPF Interest Rate: பட்ஜெட்டுக்கு முன் சுமார் 7 கோடி இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நிதி அமைச்சகத்திலிருந்து ஒரு சிறந்த செய்தி வந்துள்ளது.
EPF Interest Rate: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மூலம் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் நிதியில் மாதா மாதம் சம்பளத்தின் ஒரு பங்கை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் குறித்து பல தரப்பினரும் நிதியமைச்சருக்கு பல வித கோரிக்கைகளை அளித்து வருகின்றனர். இதற்கிடையில் சுமார் 7 கோடி இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) நிதி அமைச்சகத்திலிருந்து ஒரு சிறந்த செய்தி வந்துள்ளது.
வட்டி விகிதங்களை உயர்த்த ஒப்புதல்
மத்திய நிதி அமைச்சகம் ஜூலை 11, வியாழனன்று ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் மூலம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இபிஎஃப் வட்டி விகிதம்
இந்த ஆண்டு பிப்ரவரியில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2023-24 நிதியாண்டிற்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தை அறிவித்தது. இந்த வட்டி விகிதம் தற்போது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட அதிகரித்த வட்டி விகிதம்
கடந்த ஆண்டு இபிஎஃப் வட்டி விகிதம் (EPF Interest Rate) 8.15% ஆக இருந்தது. இதை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, 2023-24 நிதியாண்டுக்கு 8.25% ஆக உயர்த்தியுள்ளது. வட்டி விகித அதிகரிப்பின் மூலம் சுமார் 7 கோடிக்கும் அதிகமான பிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பயனடைவார்கள்.
EPFO சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டு இந்த தகவலைத் தந்தது. தனது இடுகையில் இபிஎஃப்ஓ, ‘EPF உறுப்பினர்களுக்கு 2023-24 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.25% ஆக மே 2024 இல் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. தற்போது நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்ட நிலையில், இந்த தொகை தங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட பிஎஃப் சந்தாதாரர்கள் காத்திருக்கிறார்கள்.
பிப்ரவரியில் வட்டி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியானது
மத்திய அறங்காவலர் குழு (CBT), 2023-24 நிதியாண்டுக்கு பிஎஃப் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவதாக பிப்ரவரி மாதம் அறிவித்தது. சிபிடி EPFO இன் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஃப் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.15 சதவீதம் என்ற அளவிலிருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது. CBT மூலம் எடுக்கப்பட்ட முடிவிற்குப் பிறகு, 2023-24 ஆம் ஆண்டிற்கான EPF டெபாசிட்களுக்கான வட்டி விகித திருத்தம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இப்போது நிதி அமைச்சகத்திடமிருந்து இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: காத்திருக்கும் 3 முக்கிய அறிவிப்புகள்
இபிஎஃப் கணக்கில் வட்டி பணம் வந்துவிட்டதா என்பதை எப்படி செக் செய்வது?
இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் இபிஎஃப் வட்டித் தொகை வந்துவிட்டதா என்பதை எளிதான வழிகளில் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். இதை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளிலும் செக் செய்ய முடியும்.
ஆன்லைனில் பிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?
- இபிஎஃப்ஓ -வின் அதிகாரப்பூர்வ உமங் செயலியின் (Umang App) மூலம் பிஎஃப் இருப்பை செக் செய்யலாம். இதற்கு மொபைல் போனில் உமங் செயலியை திறந்து, அதில் லாக் இன் செய்து, உங்கள் EPF பாஸ்புக்கை அணுக வேண்டும்.
- EPF இந்தியா இணையதளத்தின் (EPFO Website) மூலமாகவும் இபிஎஃப் இருப்பை (EPF Balance) தெரிந்துகொள்ளலாம். இணையதளத்தில், “For Employees” என்ற ஆப்ஷனில் சென்று “Services” டேப்பில் உள்ள “Member Passbook” -ஐ க்ளிக் செய்ய வேண்டும். இதில் லாக் இன் செய்ய உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவைப் பயன்படுத்த வேண்டும். பதிவு செய்த 6 மணி நேரத்திற்குள் உங்கள் பாஸ்புக்கை காணலாம்..
ஆஃப்லைனில் பிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?
- பிஎஃப் உறுப்பினர்கள் SMS சேவையைப் பயன்படுத்த, பட்கிவு செய்யப்பட்ட தங்கள் மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு "EPFOHO UAN" என்ற செய்தியை அனுப்பி இபிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்.
- உறுப்பினர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் (Missed Call) கொடுத்தும் இருப்பை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | மனைவியின் கணக்கில் பணத்தை போட்டு வரியை சேமிக்கலாம்: இதோ சூப்பர் டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ