EPFO New Rules: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிம்மதி... இனி இதை செய்ய வேண்டாம்
EPFO New Rules: ஒரு ஊழியர் வேலையை மாற்றும் போது, அவரது UAN இல் புதிய நிறுவனம் சேர்க்கப்படுகின்றது. முன்னர் அவர் ஆன்லைனில், EPFO இணையதளத்திற்குச் சென்று பழைய பிஎஃப் கணக்கை புதிய கணக்குடன் இணைக்க வேண்டும்.
EPFO New Rules: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான விதியில் மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய மாறுதலின் கீழ், இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் (EPFO Members) தங்கள் வேலையை மாற்றினால், அவர்களது இபிஎஃப் தொகை (EPF Amount) தானாகவே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும். இதற்காக உறுப்பினர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு பிஎப் தொகையை மாற்றுவதற்கு, பணியாளர்கள் படிவம் 31 -ஐ பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது.
EPFO New Rules: தொகை தானாகவே மாற்றப்பட்டும்
முன்னர், பணியாளர்கள் வேலை மாறினால், பிஎஃப் சந்தாதாரர்கள் யுனிவர்சல் அக்கவுன்ட் எண் (UAN) இருந்தாலும் அதற்கு விண்ணப்பிக்க, அது தொடர்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டி இருந்தது. இதற்கு ஒரு சிறப்பு வகை படிவம் 31 -ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு, சில நாட்களில் புதிய நிறுவனத்திற்குத் தொகை மாற்றப்படும். எனினும், தற்போது புதிய அமைப்பு வந்த பிறகு இந்த நடைமுறைகள் எதுவும் தேவை இருக்காது. தொகை தானாகவே மாற்றப்பட்டு விடும்.
தொகையை மாற்றும்போது இனி பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை
ஒரு ஊழியர் வேலையை மாற்றும் போது, அவரது UAN இல் புதிய நிறுவனம் சேர்க்கப்படுகின்றது. முன்னர் அவர் ஆன்லைனில், EPFO இணையதளத்திற்குச் சென்று பழைய பிஎஃப் கணக்கை (PF Account) புதிய கணக்குடன் இணைக்க வேண்டும். இந்தச் செயல்பாட்டில், EPFO உறுப்பினர்கள் அடிக்கடி பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இது தவிர இதில் ஊழியர்களின் பழைய மற்றும் புதிய நிறுவனங்களும் இதற்கான சில செயல்முறைகளை செய்ய வேண்டி இருந்தது. இப்போது புதிய விதியின் கீழ், இந்த செயல்பாட்டில் உறுப்பினருக்கு எந்தப் பங்கும் இருக்காது.
மேலும் படிக்க | சட்டவிரோத கடன் செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் ஆர்பிஐ! புதிய நடைமுறை விரைவில்
UAN: இதற்கான தேவை என்ன?
யுனிவர்சல் அகவுண்ட் நம்பர் எனப்படும் UAN, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவருக்கு மையப்படுத்தப்பட்ட தளமாக செயல்படுகிறது. இது ஒரு உறுப்பினரை பல PF கணக்குகளை ஒன்றாக இணைக்க அனுமதிக்கிறது. இது தவிர UAN மற்ற சேவைகளையும் வழங்குகிறது. இதன் கீழ் EPFO உறுப்பினர் UAN அட்டை மற்றும் PF பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்யலாம், மேலும் பிஎஃப் கணக்கில் உள்ள மொத்த இருப்புத் தொகை பற்றிய தகவலை SMS மூலம் பெறலாம்.
EPFO: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
சம்பள வர்க்கத்தினர் அனைவரும் பெரும்பாலும் இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை பணியாளர் வைப்பு நிதியில் பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பணியாளர்களின் கணக்கில் மாதா மாதம் டெபாசிட் செய்கின்றது. பிஎஃப் தொகை பணி ஓய்விற்கு பிறகான காலத்தில் உதவும் முக்கிய சேமிப்பாக பார்க்கப்படுகின்றது.
EPFO இன் இந்த சமீபத்திய மாற்றத்தின் மூலம், பணியாளர்கள் தாங்கள் சேமித்த நிதியை எளிதாக அணுகும் வாய்ப்பை பெறுகிறார்கள். மேலும், ஓய்வூதியப் பயணத்தை இது பாதுகாப்பானதாகவும் நிம்மதியானதாகவும் மாற்றுகின்றது.
மேலும் படிக்க | இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? அப்போ ‘இதில்’ முதலீடு செய்யுங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ