இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? அப்போ ‘இதில்’ முதலீடு செய்யுங்கள்..

கையில் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு அதை எதில் முதலீடு செய்து இரட்டிப்பாக்க வேண்டும் என்று தெரியவில்லையா? இதோ சில ஈசி டிப்ஸ்.   

Written by - Yuvashree | Last Updated : Apr 9, 2024, 06:39 PM IST
  • பணத்தை இரட்டிப்பாக்க வழி
  • சேமிப்பு திட்டங்களும் அதில் கிடைக்கும் வட்டி விகிதங்களும்..
  • எதில், எவ்வளவு லாபம் கிடைக்கும்?
இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? அப்போ ‘இதில்’ முதலீடு செய்யுங்கள்.. title=

பலருக்கு கையில் இருக்கும் அனைத்து பணத்தையும் தாங்கள் ஆரம்பிக்கும் தொழிலில் முதலீடு செய்து, அதன் மூலம் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலருக்கு அது போன்ற தொழில் யோசனைகள் இல்லாவிடிலும், சேபமிப்பிற்காக வைத்திருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற யோசனை இருக்கும். ஆனால் சரியாக எதில் முதலீடு செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்காது. இப்படி இருப்பவர்களுக்கும், சேமிக்கும் பணத்தை எளிதாக இரட்டிப்பாக்க நினைப்பவர்களுக்கும், பல முதலீடு யோசனைகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

மியூஷுவல் ஃபன்ட்ஸ்:

இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு மியூஷுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. இவை, பயணாளர்களுக்கு நல்ல முதலீட்டு திட்டமாகவும், நல்ல வருமானம் தரும் திட்டமாகவும் இருக்கிறது. ஆனால், இதில் முதலீடு செய்வதற்கு முன்னர் சந்தை அபாயங்களை பார்த்துக்கொள்வது மிகவும் நல்லதாகும். மியூஷுவல் ஃபண்ட்ஸ் திட்டங்கள், உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கவும் செய்யும். நெடுங்கால மியூஷுவல் ஃபண்ட் திட்டங்கள் (Long Term Mutual Funds) ஒரு வருடத்தில் 12 முதல் 15 சதவிகிதம் வரை வட்டியை தருகின்றன. இதில் முதலீடு செய்தால், 5 முதல் 6 வருடத்தில் நீங்கள் போட்ட பணத்தை இரட்டிப்பாக்கலாம். 

கார்ப்பரேட் பாண்டுகள்:

பணத்தை வங்கியில் செலுத்துவதால், அதிலிருந்து வரும் வட்டி, மிகவும் குறைவானதாகவே இருக்கும். அதிக வட்டி விகிதம் வேண்டும் என்றால், கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்யலாம் என சில பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் முதலீடு செய்யும் பாண்டுகளின் நம்பகத்தன்மையை வைத்து அதன் வட்டி விகிதமும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

ரியல் எஸ்டேட்:

இதில் பணத்தை செலுத்துவதும் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கும் துறைகளுள் ஒன்றாகும். இது, இரட்டிப்பாக்கும் முயற்சியாக மட்டுமன்றி ஒரு அசையா சொத்தாகவும் இருக்கும். முன்பு சென்னை, வேளச்சேரியில் 5,000த்திற்கு நிலம் வாங்கியவர்கள் எல்லாம், இன்று கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். எனவே, நிலத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். 

மேலும் படிக்க | இபிஎஃப் சந்தாதாரரா நீங்கள்? விதிகளில் மாற்றம்... உறுப்பினர்களுக்கு பெரிய நிவாரணம், விவரம் இதோ

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund): 

இது, 15 வருட சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் குறைவான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்தாலும், இரட்டிப்பான வருமானத்தை பார்க்க முடியும். மாத சம்பளம் வாங்குபவர்கள், அரசு ஊழியர்கள், சூய தொழில் செய்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் இதில் முதலீடு செய்கின்றனர். இந்த திட்டத்தில் முதலீடு செய்த 8 வருடத்திற்குள்ளாகவே வருடத்திற்கு 8.75 சதவிகிதம் உங்கள் முதலீடு உயர வாய்ப்பு இருக்கிறது.

கோல்ட் ஈடிஎஃப்:

இந்தியர்களையும் தங்கத்தையும் பிரிக்க முடியாது. நம் நாட்டை பொறுத்தவரை, தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, ஒரு பெரிய முதலீடும் கூட. இதில் முதலீடு செய்யாதவர்கள் கூட, இப்போது கோல்ட் ஈடிஎஃப் எனும் திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். இதுவும் தங்கப்பத்திரம் போன்றதுதான் என்றாலும் இரண்டிற்கும் சிறிதளவு வித்தியாசம் இருக்கின்றன. இதில், குறைந்தபட்ச முதலீடாக ஒரு கிராம் கோல்டு வரை முதலீடு செய்யலாம். நீங்கள் எவ்வளவு தொகையில் முதலீடு செய்கிறீர்களோ, அந்த தொகைக்கு அதிகமான 2.5 சதவிகித வட்டி ஒரு வருடத்திற்கு கிடைக்கும். இதுவும், 8 வருட கால சேமிப்பு திட்டமாகும். 8 வருடத்தில் நீங்கள் முதலீடு செய்த தொகையை விட அதிகப்படியான தொகையை கையில் பார்க்கலாம். 

மேலும் படிக்க | பெண்களுக்கான சேமிப்பு திட்டம்... ரூ.2 லட்சம் முதலீட்டிற்கு ரூ.31,125 வட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News